மிஸஸ் சென்னை டூ மாஸ் சீரியல் மம்மி.. ராஜபார்வை ஆர்த்தி ராம்குமார் லைஃப் ட்ராவல்!

Vijay TV Actress: மிஸஸ் சென்னை பட்டம் பெற்ற ஒரு மாதத்தில் சன் டிவியிலிருந்து சீரியலில் நடிக்க அழைப்பு வந்துள்ளது.

arthi ramkumar

ராஜபார்வை சீரியலில் மகாலட்சுமியாக நடித்து வருபவர் ஆர்த்தி ராம்குமார். சென்னையை சேர்ந்த இவர் பெங்களூர் யுனிவர்சிட்டியில் MBA கோல்ட் மெடலிஸ்ட். சென்னை மற்றும் மும்பையில் எம்என்சி நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளார். திருமணத்திற்கு பிறகு வேலையை விட வேண்டியிருந்துள்ளது. சில மாதங்கள் வீட்டில் இருந்தவர் தொழில் முனைவோராக முடிவெடுத்துள்ளார். ‘Posh Stays’ என்ற பெயரில் சர்வீஸ் அப்பார்ட்மென்ட், பெண்களுக்கான விடுதிகளை உருவாக்கினார். 12 வருடமாக இயங்கி வரும் விடுதி, தற்போது சென்னையில் ஐந்து இடங்களில் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ்ஸஸ் சென்னை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மிஸஸ் சென்னை பட்டம் பெற்ற ஒரு மாதத்தில் சன் டிவியிலிருந்து சீரியலில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. நாயகி சீரியலில் ராஜலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். அதை தொடர்ந்து தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் பானுமதி என்ற கேரக்டரிலும் நடிக்கிறார். விஜய்டிவியின் ராஜபார்வை சீரியலில் ஆனந்தின் அம்மாவாக மஹாலக்ஷ்மி என்ற கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார். இவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சன் டிவியின் மின்னலே சீரியலில் வர்ஷா மற்றும் கங்காவின் தாயாக மங்களம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். தவிர அன்புடன் குஷி மற்றும் மலர் உள்ளிட்ட பல தொலைக்காட்சி சீரியல்களில் தோன்றியுள்ளார். பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருப்பதோடு மட்டுமில்லாமல், மக்கள் மத்தியில் ரொம்பவே பாப்புலராகியுள்ளார். சீரியல்களில் செலக்டிவான காஸ்டியூம்களை போடுகிறார். இவரது டிரெஸிங் சென்ஸ் ஏகப்பட்ட இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது. சீரியல்களில் யங் மம்மியாக கலக்கி வருகிறார்.

வெள்ளித்திரையில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த “பாரிஸ் ஜெயராஜ்” திரைப்படத்திலும் நடித்துள்ளார். இல்லத்தரசி, தொழில் முனைவோர், மிஸ்ஸஸ் சென்னை, நடிகை என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv raja paarvai mahalakshmi aarthi ramkumar biography

Next Story
Health tips: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவை 5-யும் தவிருங்க!Tamil Health tips: Dietitian shares 5 things that don’t help the immune system
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com