விஜய்டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சந்தியாவை அதிகம் திட்டி ரசிகர்களை ரொம்பவே டென்ஷனாக்குபவர் மாமியார் சிவகாமி. இவரது நிஜப்பெயர் பிரவீனா நாயர். கேரள மாநிலம் செங்கணசேரியில் பிறந்தவர். இவரது அப்பா கல்லூரி பேராசிரியர். பிரவீனா 18 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற படம் மூலம் அறிமுகமானார். தூர்தஷன் நிகழ்ச்சியான ஸ்வப்த ஸ்வரங்கள் இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார் பிரவீணா.

அதில் கலியூஞ்சல் படத்தில் திலீப்புடன் இணைந்து நடித்தார். பிறகு ஒரல் மாத்திரம் தி ட்ரூத் மற்றும் எழுபுன்னா தரக்கான் ஆகிய படங்களில் மம்முட்டியின் தங்கையாக நடித்தார். நான்கு முறை கேரள மாநில அரசின் விருது பெற்றுள்ளார். இவர் 1998ல் வெளியாகி வெற்றி பெற்ற அக்னிசாக்ஷி படத்திற்காக கேரள மாநில அரசின் விருது பெற்றுள்ளார். அதேபோல் எலேக்ட்ரா மற்றும் இவன் மெகரூபன் ஆகிய படங்களுக்கு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான கேரள மாநில அரசின் விருதை பெற்றுள்ளார். மலையாளத்தில் செம்ம ஹிட் ஆன 100 டேஸ் ஆப் லவ் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார். வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்குள் நுழைந்த இவர் ஏராளமான மலையாள சீரியல்களில் நடித்தார். பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்துள்ளார்.

இவர் முதன் முதலில் தமிழ் சின்னத்திரையில் கலைஞர் டிவியின் நம்ம குடும்பம் தொடர் மூலம் தான் அறிமுகமானார். அதன்பிறகு விஜய்டிவி, சன்டிவியில் ஏராளமான சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். சன்டிவியின் பிரியமானவளே சீரியலில் இவர் நடித்திருந்தது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார் பிரவீணா. கார்த்தி நடித்த தீரன் அதிகாரம், சாமி 2, கோமாளி, வெற்றிவேல் ரீசன்ட்டாக வெளியான டெடி உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து இருக்கிறார்.

இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ப்ரமோத் நாயர் என்பவருடன் திருமணம் ஆனது. ப்ரமோத் துபாயில் ஒரு வங்கியின் மேனேஜர் ஆவார். இந்த தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆவார். கௌரி என்ற மகள் பிறந்தார்.அது மட்டும்மல்லாமல் இவர் ஸ்ரீவித்யாவின் நெருங்கிய உறவினர். தமிழ் சினிமாவில் 60 காலகட்டங்களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீவித்யா. நடிகை பிரவீனா சின்னத்திரை, பெரியத்திரை இரண்டிலும் பலவிதமான ரோல்களில் நடித்து கலக்கி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”