டிக்டாக் பிரபலம், விஜே, இப்போ சீரியல் வில்லி.. ராஜா ராணி அர்ச்சனா பர்சனல் ப்ரொஃபைல்!

Vijay Tv Serial Actress: கல்லூரி படிக்கும்போது டப்ஸ்மேஷ், டிக்டாக் வீடியோக்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் ராஜா ராணி அர்ச்சனா.

vj archana

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. சென்னையை சேர்ந்தவர். இவரது அப்பா கல்லூரி பேராசியரியர். இன்ஜினியரிங் படித்த அர்ச்சனாவிற்கு சிறு வயதிலிருந்தே ஆன்கராக வேண்டும் என்பதுதான் ஆசையாம். கல்லூரி படிக்கும்போது டப்ஸ்மேஷ், டிக்டாக் போன்ற ஆப்களில் வீடியோக்களை அப்லோடு செய்து பிரபலமானவர்.

காதல் பாடல்களை, ரொமாண்டிக் எக்ஸ்பிரஷன்களோடு டிக் டாக்கில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதன் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டார். இதில் கிடைத்த பாப்புலாரிட்டி மூலம் ஆதித்யா காமெடி தொலைக்காட்சியில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அர்ச்சனா காலெஜ் இறுதி ஆண்டு படித்து வந்தார். பிறகு சேனலில் ஒரு வருடம் வேலை செய்து வந்தார். அப்போதுதான் இன்ஸ்டாகிராமில் அர்ச்சானாவின் புகைப்படத்தை பார்த்து விஜய் டிவியின் ராஜாராணி2 ஆடிஷனுக்கு அழைத்துள்ளனர். அதில் செலக்ட் ஆனவர் சீரியலின் வில்லியாக நடித்து வருகிறார்.

இவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் உள்ளனர். இவ்வளவு மோசமான ஒரு பெண்ணா என கேட்கும் அளவுக்கு அவரது ரோல் இருக்கும். எனினும் காமெடி கலந்த வில்லியாக சிரிக்கவும் வைக்கிறார். என்னதான் சினிமாவில் ஜெயித்து மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார்கள். அந்த வகையில் அர்ச்சனாவும் ஒரே சீரியல் மூலம் பாப்புலராகியுள்ளார். இவர் சீரியல் மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலும் பங்குப்பெற்று வருகிறார்.

தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். டான்ஸ், பாட்டுப்பாடுவது அர்ச்சனாவின் பொழுதுபோக்கு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டிஸ், ஃபோட்டோஷூட் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சினிமாவில் நல்ல சான்ஸ் கிடைத்தாலும் நடிக்க ஆர்வமாக உள்ளார் அர்ச்சனா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv raja rani2 vj archana biography

Next Story
முகப்பருக்கள் மறைய வீட்டிலிருக்கும் இந்த பொருள் போதும் – புது புது அர்த்தங்கள் பார்வதி பியூட்டி சீக்ரெட்ஸ்!Puthu Puthu Arthangal Actress Parvathy Beauty Secrets Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express