தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலில் அம்மாவாக நடித்து வரும் பாக்கியலட்சுமி என்கிற சுசித்ரா ஒவ்வொரு இல்லத்தரசிகளின் உள்ளங்களை பிரதிபலிப்பதுபோல் நடித்து வருகிறார்.
Advertisment
பெங்களூரில் பிறந்து வளர்ந்த சுசித்ரா அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை 14 வயதிலேயே தொடங்கி விட்டார். உபேந்திரா அவர்களின் தங்கையாக எ(A) என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி என்ற படத்திலும் மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2014ல் AL விஜய் இயக்கத்தில் சைவம் படத்தில் நடித்திருந்தார் சுசித்ரா. பிறகு 2019ல் வெளியான எஜமான என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். இவர் இருபதிற்க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார்.வெள்ளி திரையில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுது சுஜித்ராவுக்கு சின்ன திரையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
மனே தன என்ற தொடரின் மூலம் கன்னட சின்னத் திரைக்கு அறிமுகமாகி உள்ளார். மேலும் இவர் காவியாஅஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி போன்ற பல கன்னட தொடர்களில் நடித்து உள்ளார். இவ்வாறு கன்னட தொடர்களில் நடித்துக் கொண்டு இருந்தவருக்கு தெலுங்கு சின்னத் திரைக்கான வாய்ப்பு கதவை தட்டியது. ஜெமினி டிவியில் கன்டெ குடற் நீ கடலி என்ற தொடரில் அறிமுகமானார். மேலும் அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற பத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு தொடர்களில் நடித்து வந்துள்ளர்.
Advertisment
Advertisements
இவர் தமிழில் சின்னத்ரைக்கு அறிமுகமானது கலைஞர் டிவியில் ராபர்ட் ராஜஸேகரன் இயக்கத்தில் 2008ல் ஒளிபரப்பான நாணல் தொடரின் மூலம்தான்.முதலில் பாக்கியலட்சுமி தொடருக்காக இவரை அழைத்துபோது எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார். பிறகு நேராக சீரியல் மேனேஜரிடம் இருந்து அழைப்பு வர சென்னைக்கு வந்த அவர் இந்த தொடரில் நடிக்க தேர்வாகியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீரியல் ஆரம்பித்து சில மாதங்களிலேயே பயங்கர ஹிட். இத்தொடரில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளார். தன் கணவன் மற்றும் குடும்பமே வாழ்கையென நினைக்கும் மனைவியாக, வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பெண்ணாக நடிக்கிறார் சுசித்ரா. இந்த தொடர் வந்தபிறகு பலர் தங்களின் அம்மாவும் இதுபோலத் தான் துன்பங்களை தாங்கி வாழ்கிறார் என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு அழகான அம்மாவாக நடிக்கிறார்.இந்த தொடர் ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸ்ரீமோயி’ என்ற பெங்காலி மொழித் தொடரின் ரீமிக்ஸ் ஆகும். சுசித்ராவை செட்டில் எல்லோரும் அம்மா என்றே அழைக்கின்றனராம். வீட்டில் எப்படி இருக்கிறேனா அப்படிதான் சீரியலில் நடிக்கிறேன் என எதார்த்தமாக பேசும் சுசித்ராவுக்கு விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு அம்மாவாக வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"