14 வயதில் கன்னட சினிமா அறிமுகம்.. சீரியலில் சென்டிமென்ட் அம்மா.. பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியா லைஃப் ட்ராவல்!

Vijay Tv Serial Actress: தனது 14 வயதில் நடிகர் உபேந்திராவின் தங்கையாக எ(A) என்ற கன்னட படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் KS சுசித்ரா.

Vijay Tv Serial Actress: தனது 14 வயதில் நடிகர் உபேந்திராவின் தங்கையாக எ(A) என்ற கன்னட படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் KS சுசித்ரா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ks suchithra

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் முதலிடத்தில் இருப்பது பாக்கியலட்சுமிதான். நல்ல டிஆர்பியில் சென்றுகொண்டிருக்கும் இந்த தொடர் குடும்ப கதையை பின்னணியாக கொண்டது. இந்த சீரியலில் அம்மாவாக நடித்து வரும் பாக்கியலட்சுமி என்கிற சுசித்ரா ஒவ்வொரு இல்லத்தரசிகளின் உள்ளங்களை பிரதிபலிப்பதுபோல் நடித்து வருகிறார். பெங்களூரை இருப்பிடமாக கொண்ட இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை 14 வயதிலேயே தொடங்கி விட்டார். நடிகர் உபேந்திராவின் தங்கையாக எ(A) என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

Advertisment

தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி என்ற படத்திலும் மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார், எஜமான போன்ற படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2014ல் AL விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தில் நடித்திருந்தார் சுசித்ரா. வெள்ளி திரையில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுது சுசித்ராவுக்கு சின்ன திரையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவரின் முதல் சீரியல் மனே தன என்ற கன்னட தொடர். இதில் நடித்த பிறகு சுசித்ராவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

காவியாஅஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி போன்ற பல கன்னட தொடர்களில் நடித்துள்ளார். கன்னட தொடர்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தவருக்கு தெலுங்கு சின்னத் திரைக்கான வாய்ப்பு கதவை தட்டியது. ஜெமினி டிவியில் கன்டெ குடற் நீ கடலி என்ற தொடரில் அறிமுகமானார். மேலும் அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற 10க்கும் மேற்பட்ட தெலுங்கு தொடர்களில் நடித்து ஃபேமஸ் ஆனார். பல மொழி சீரியல்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் இவருக்கென தனி அடையாளத்தை கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல்தான்.

இவர் தமிழ் சின்னத்திரையில் முதலில் அறிமுகமானது கலைஞர்டிவியில் தான். ராபர்ட் ராஜசேகரன் இயக்கத்தில் 2008ல் ஒளிபரப்பான நாணல் தொடரில் நடித்தார். அதன்பிறகுதான் விஜய்டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸ்ரீமோயி’ என்ற பெங்காலி மொழித் தொடரின் ரீமிக்ஸ் ஆகும். இந்த சீரியல் குறித்த பேச்சுவார்த்தையில் சுசித்ரா தான் சரியாக இருப்பார் என இயக்குனரால் தேர்வு செய்யப்பட்டார். 300 எபிசோடுகளை கடந்து முன்னணி டிஆர்பியில் உள்ளது இந்த தொடர். தனது எதார்த்தமான நடிப்பால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்துள்ளார் சுசித்ரா.

Advertisment
Advertisements

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுசித்ராவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோவர்ஸ். இன்ஸ்டாவில் ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டிஸ், ரீல்ஸ், டான்ஸ் வீடியோ என பதிவிட்டு ரசிகர்களிடையே வைரலாக்கி வருகிறார். சுசித்ராவை செட்டில் எல்லோரும் அம்மா என்றே அழைப்பார்களாம். ஏனென்றால் செட்டிலும் அவர் ரீல் பாக்கியா போலவே அன்புடன் கவனிப்பாராம். வீட்டில் எப்படி இருக்கிறேனோ அப்படிதான் சீரியலில் நடிக்கிறேன் என எதார்த்தமாக பேசும் சுசித்ராவுக்கு வெள்ளித்திரையில் விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது ஆசையாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: