விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து வருபவர் நந்திதா ஜெனிபர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை பழம்பெரும் சினிமா டான்ஸ் மாஸ்டர் சின்னா. 2000 ஆம் ஆண்டில் நடிகர் அர்ஜூன் நடித்த ரிதம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் 2002 ல் ஷாம்-சிநேகா நடிப்பில் வெளியான ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் யாமினி கேரக்டரில் நடித்து ஒரு பாடல் காட்சியில் நடனமாடினார். அதன்பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முத்தம் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இந்த படம் நெகட்டிவ் ஆன விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது.
Advertisment
பிறகு தனது பெயருக்கு முன்னாள் நந்திதா என சேர்த்துக்கொண்டார். இதை தொடர்ந்து பாரதிராஜாவின் ‘‘ஈர நிலம்’’, ‘‘ராவண தேசம்’’, ‘‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’’, ‘‘அறிந்தும் அறியாமலும்’’, ‘‘திரு துரு’’, ‘‘ஜனனம்’’, ‘‘பேத்தி சொல்லை தட்டாதே’’, ‘‘தர்மா’’, ‘‘இன்று முதல்’’, ‘‘பார்த்திபன் கனவு’’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். நிறைய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். துணை ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதன் என்பரை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷாந்தனவ் என்ற மகன் உள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
Advertisment
Advertisements
திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.சன்டிவியின் புவனேஸ்வரி சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். அதன்பிறகு நாகவல்லி சீரியலில் டைட்டில் ரோலில் நடித்துள்ளார். பின்பு 2019ல் வெளியான குஷ்புவின் லட்சுமி ஸ்டார்ஸ் தொடரில் கமலா என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். அந்த ரோல் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவற்பை பெற்றது. ஜீ தமிழின் மிஸ்டர் & மிசஸ் கில்லாடீஸ் 2வது சீசனில் காதல் கணவருடன் இணைந்து கலந்து கொண்டார். தற்போது பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரால் அவருக்கு பயங்கர ரீச் கிடைத்துள்ளது. கலர்ஸ் தமிழின் அம்மன் சீரியலிலும் நடித்து கலக்கி வருகிறார்.
நந்திதாவுக்கு டான்ஸ் ஆடுவது மிகவும் பிடித்தமான ஒன்று. தனது ஓய்வு நேரத்தில் டான்ஸ் ஆடுவது அவருடைய வழக்கம். இது ஒரு அற்புதமான கலை. சிறந்த உடற்பயிற்சியும் கூட என நடனத்தை பற்றி புகழ்ந்து கூறுகிறார்.சமூக வலைதளமான இன்ஸ்டாவில் ஆக்டிவாக உள்ளவர், அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவரின் இளமையான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை கதாநாயகியாக நடிக்க சொல்லி கமெண்ட் செய்கின்றனராம். சீரியலில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையையும் விடுவதாக இல்லை. தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்களில் கமிட் ஆகியுள்ளாராம். விரைவில் பெரியத்திரையில் நந்திதாவை பார்க்கலாம்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"