பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகன் பாரதியின் அப்பாவாக நடித்து கவனம் பெற்றவர் வேணு கோபாலகிருஷ்ணன். இவரது நிஜப் பெயர் ரிஷி கேஷவ். உதகையை சேர்ந்த இவர் ஊட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கம்யூட்டர் சயின்ஸ் படித்த இவருக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது. பிறகு 2002 ல் சிவகுரு இயக்கிய சப்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த படம் நல்ல ரீச் கொடுத்தது. அதன்பிறகு சமஸ்தானம், யாவரும் நலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதிலும் யாவரும் நலம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இடைவெளியில் டைரக்ஷனிலும் பணியாற்றிய இவர் நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் படுகாயமடைந்த அவர், ஒன்றரை வருடங்கள் நடிப்பில் இருந்து விலகினார். அதன் பிறகு விஜய் டிவியின் நீ நான் அவள் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். தொடர்ந்து கண்ணாடி கதவுகள் தொடரில் நடித்தார். சன்டிவியின் மகள், ராஜ் தொலைக்காட்சியின் கங்கா,யமுனா,சரஸ்வதி, ஜீ தமிழின் தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார். 16 வருடங்களாக சின்னத்திரையில் பயணம் செய்து வருகிறார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது சந்திரலேகா சீரியல் தான். இதில் அழகேசன் என்கிற கேரக்டரில் சந்திராவின் பாசமான அப்பாவாக நடிக்கிறார். அவர் தனது மகளை குட்டிமா என்றழைப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 5 வருடங்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த தொடர்.

இதனை தொடர்ந்து அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது பாரதி கண்ணம்மா தொடர்தான். சவுந்தர்யாவின் கணவர் பாரதியின் தந்தையாக சாஃப்டான ரோலில் நடித்து வருகிறார். ஆரம்பம் முதலே பாரதியின் காதலுக்கும் கண்ணம்மாவிற்கு சப்போர்ட்டாக நடிக்கும் ரிஷியின் நடிப்பு அவருக்கு நிறைய ஃபேன்ஸ்களை உருவாக்கியுள்ளது. ரிஷி திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து 25 வருடங்களை கடந்துள்ளது.
ரிஷிக்கு சமையல் செய்வது ரொம்பவே பிடித்தமான ஒன்று. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் புதிதாக டிஷ் செய்து தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பிட சொல்வாராம். ட்ரவலிங் பிடித்த விஷயம். உடல் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தும் இவர், அதிகம் எடுத்துக்கொள்வது ஆர்கானிக் ஃபுட் தானாம். பெரியத்திரையை விட சின்னத்திரையில் தான் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பெருமைப்படுகிறார் ரிஷி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”