விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருபவர் வெண்ணிலா. இவரது நிஜப் பெயர் பிரியங்கா குமார். கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்ததால் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தனது 15 வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்தார். பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பிறகு மைசூரில் உள்ள வித்யாஷ்ரம் கல்லூரியில் பிபிஏ படித்தார். 2016-ல் நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் பாப்புலரானார்.
Advertisment
இதை தொடர்ந்து, கன்னட சின்னத்திரையில் நடிப்பதற்கு பிரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஸ்டார் ஸ்வர்ணா சேனலில் ஒளிபரப்பான கிருஷ்ணா துளசி தொடரில் துளசி கேரக்டரில் நடித்தார். இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு கலர்ஸ் கனடா சேனலில் ஒளிபரப்பான ராதா ரமணா தொடரில் பிங்க்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிர்களை வெகுவாக கவர்ந்தது.
Advertisment
Advertisements
கன்னடத்தில் பிஸியாக நடித்து வந்தவர் சன்டிவியின் சாக்லெட் சீரியல் மூலம் தமிழில் அறிமுகனார். அந்த தொடரில் ராகுல் ரவியுடன் இணைந்து இனியா கேரக்டரில் டஸ்கி ஸ்கின் டோனில் நடித்திருந்தார். பிரியங்காவின் நடிப்புக்கு தமிழில் அவ்வளவு ரசிகர்கள். நல்ல டிஆர்பியில் சென்றுகொண்டிருந்த சீரியல் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு சொந்த ஊர் திரும்பிய அவர் விஜய் டிவி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.
காற்றுக்கென்ன வேலி தொடரில் சூர்ய தர்ஷனுடன் இணைந்து நடித்து வருகிறார். வெண்ணிலா என்ற கேரக்டரில் கல்லூரி மாணவியாக பிரியங்காவும், ஆசிரியராக சூர்யாவும் நடிக்கின்றனர். இந்த சீரியலில் கல்லூரி சீன்கள் அதிகம் என்பதால் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தனது மார்டன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை தெறிக்க விடுகிறார். 20 வயதாகும் பிரியங்காவுக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"