scorecardresearch

மலையாள மாடல் டூ பாப்புலர் ஆக்டர்… மௌனராகம் கார்த்திக் கிருஷ்ணா ப்ரொஃபைல்…

Vijay Tv Serial Actor: மலையாள மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள், மியூசிக் ஆல்பம், சீரியல்களில் நடித்துள்ளார் ராஜீவ் பரமேஸ்வர்.

mouna ragam karthik

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் மௌனராகம். முதல் சீசனில் பேபி கிருத்திகா, பேபி ஷெரின் ஃபர்ஹானா, ராஜீவ் பரமேஷ்வர், ஷமிதா ஸ்ரீகுமார் மற்றும் சிப்பி ரென்ஜித் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்தநிலையில் தற்போது 12 வருடத்திற்குப் பின்னர் என்று இந்த சீரியலின் இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது. 800 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த தொடர். இந்த இரண்டு பாகத்திலும் கார்த்திக் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ராஜீவ் பரமேஷ்வர் நடித்து வருகிறார். கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். மாடலான இவர் வித்யா பாலன், பூர்ணிமா இந்திரஜித், லீனா அபிலாஷ் ஆகியோருடன் மாடலிங் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

மலையாள மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள், மியூசிக் ஆல்பம், சீரியல்களில் நடித்துள்ளார். விளம்பரங்கள் மூலம் மலையாள சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதன் முதலில் “ஸ்வயம்வர பாந்தல்” என்ற படம் மூலம் அறிமுகமானார். ஈஸ்ட் கோஸ்ட் இசை ஆல்பங்கள் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். அதே நேரத்தில் மலையாள சின்னத்திரையில் காவியூர் பொன்னம்மாவுடன் இணைந்து ப்ரேயசி சீரியலில் நடித்தார். தொடர்ந்து ஓமக்குயில், வேணல்மாழா, காவ்யாஞ்சலி, ஓமனந்திங்கள் பக்ஷி போன்ற தொடர்களில் முக்கிய ரோலில் நடித்து சின்னத்திரையில் முன்னணி நடிகரானார்.

சீரியல்களில் ஒருபக்கம் நடித்தாலும் படங்களிலும் சிறப்பு தோற்றங்களில் நடித்து வந்தார் ராஜீவ். தி கேம்பஸ், ரகசிய போலீஸ், சிம்ஹாசனம், Mr.Fraud, நித்ரா, பாப்பி அப்பாச்சா மற்றும் தி மெட்ரோ போன்ற சில பிரபலமான படங்களில் தோன்றியுள்ளார். இதுவரை மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களிலும், 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ராஜீவ்.

பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள இவர் டெலிஃபிலிம்களிலும் நடித்துள்ளார். நிறைய படங்களில் வில்லன் ரோல்களில் நடித்து அசத்தியுள்ளார். தமிழில் இவரது முதல் அறிமுகம் விஜய்டிவியின் மௌனராகம் தொடர்தான். பலரின் மனதை கவர்ந்த நடிகராக நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார் கார்த்திக் கிருஷ்ணா. தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vijaytv serial mouna raagam karthik krishna biography