மெளன ராகம்2 சீரியலில் சக்தியாக நடித்து வருபவர் ரவீனா தாஹா. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 18 வயதாககும் ரவீனா பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ரவீனா. அதன் பிறகு 2016ஆம் ஆண்டு வெளியான ‘கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தில் நடித்தார். பிறகு Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். சினிமா தவிர்த்து சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
Advertisment
ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அதில் இவர் கடைக்குட்டி தங்கச்சியாக பல சேட்டைகள் செய்து அசத்தி வருகிறார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காரைக்கால் அம்மையார் என்ற தொடரிலும் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பராக வெற்றியடைந்த திரைப்படம் ராட்சசன். இதில்.அம்மு அபிராமிக்கு அடுத்ததாக மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவீனா. இந்த படத்தில் இவது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல்வேறு நடனம், காமெடி ஷோக்களிலும் பங்கேற்று நடித்து வருகிறார்.
Advertisment
Advertisements
தற்போது விஜய்டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நல்ல ஹிட்டடித்த சீரியல் மௌனராகம். அந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பேபி கிருத்திகா. தற்போது சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கிருத்திகாவிற்கு பதிலாக ரவீனா நடித்து வருகிறார். முதல் சீசனை போலவே இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சீரியல் மட்டுமின்றி தற்போது விரைவில் வெளியாக உள்ள பிட்சா 3 படத்திலும் ரவீனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சீரியல் சினிமா இரண்டிலுமே இந்த வயதில் பிஸியாக நடித்து வருகிறார் ரவீனா . நடிப்பை தாண்டி டான்ஸ் ஆடுவது, இசை கேட்பது, செல்லப்பிராணிகளை வளர்ப்பதும் தான் ரவீனாவின் பொழுதுபோக்கு விஷயங்களாம். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவான ரவீனா தாஹா, முன்னணி நடிகைகளையே பின்னுத் தள்ளும் அளவிற்கு போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். தற்போது 2K கிட்ஸ் பேவரேட் நடிகை ரவீனா தாஹாதான். அவர் விதவிதமாக எடுத்து தள்ளி இருக்கும் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் கமெண்டுகள் போட முடியாமல் திணறுகிறார்கள்.
நல்ல கதையம்சம் உள்ள படம் அமைந்தால் வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிப்பாராம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"