விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து வருபவர் வைஷ்ணவி அருள்மொழி. தமிழகத்தை சேர்ந்தவர். மதுரை, கோயம்புத்தூரில் ஸ்கூல் மற்றும் காலேஜ் படிப்பை முடித்துள்ளார். அம்மா டீச்சர். ஏரோநாட்டிகல் முடித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்துள்ளார். அப்போதுதான் சில்லாக்கி டும்மா என்ற யூடியூப் சேனலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
Advertisment
ஏராளமான கான்செப்ட் வீடியோஸில் நடித்தார். அண்ணன்- தங்கை கான்செப்ட் ரொம்பவே பிரபலம். Mr.&Mrs. Kadhal உள்ளிட்ட ஏராளமான ஷார்ட் பிலிமில் நடித்து சோசியல் மீடியாவில் பிரபலமானார். இவர் நடிக்கும் கேரக்டர் எல்லாம் பெரும்பாலும் தங்கை வேடம்தான். ஷார்ட் பிலிம்கள் மூலம் கிடைத்த புகழால் தான் ஜீ தமிழின் மலர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் ஹீரோயின் தங்கை கேரக்டர்தான்.
Advertisment
Advertisements
ஸ்வாதியாக நடித்து நல்ல ரீச் ஆனார். அதன் பிறகு விஜய்டிவியின் பொனுக்கு தங்க மனசு சீரியலில் நடித்தார். பின்னர் சன்டிவியின் அழகு சீரியலில் திருநாவை உருகி உருகி காதலிக்கும் நிவி என்ற ரோலில் நடித்தார். இந்த தொடர்தான் அவருக்கு ஏகப்பட்ட பேன்ஸ்களை உருவாக்கியது. கொரோனாவுக்கு பிறகு சீரியல் நிறுத்தப்பட்டதும் எந்த தொடரிலும் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் ஐஸ்வர்யா வாக மாயனின் தங்கையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் திமிரான தங்கையாக நடித்து வந்தவர் தற்போது எமோஷனல் சீனில் கலக்கி வருகிறார்.
சின்னத்திரை பப்ளிசிட்டியால் தற்போது பெரியத்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் சபாபதி படத்தில் சந்தானத்தின் தங்கையாக நடித்து வருகிறார். வைஷ்ணவிக்கு அம்மா என்றால் அவ்வளவு பிரியம். வைஷ்ணவி என்ற பெயருக்கு பின்னால் அருள்மொழி என அவரது அம்மா பெயரை சேர்த்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை அவ்வபோது பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் சக நடிகர்களுடன் இன்ஸ்டா ரீல்ஸ் பன்னுவது இவரது பொழுபோக்கு. நிஜத்தில் ரொம்பவே துருதுருனு இருப்பவர். வைஷ்ணவிக்கு வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil