விஜய் டிவியின் செம ஹிட்டான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்2. இந்த தொடரில் மாயனின் அம்மாவாக நாச்சியார் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் சபிதா ஆனந்த். 5 வயதில் மாட்டொரு சீதா என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு தங்கை வேடங்களில் சில படங்களில் நடித்து மலையாள ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். 1984ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் உணரு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மலையாளத்தில் சுமார் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் சபிதாவின் முதல் அறிமுகம் சின்னப்பூவே மெல்ல பேசு படம்தான். இதில் பிரபு ஜோடியாக நடித்திருப்பார். அதன்பிறகு ராமராஜனுடன் என்னைவிட்டு போகாதே படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து தலைவாசல், சின்னத்தாயி படத்தில் ராசம்மா கேரக்டர், உள்ளே வெளியே, மாயி, வாழ்க்கை சத்திரம்,நினைவெல்லாம் நித்யா, கைதியின் தீர்ப்பு என ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
திரைக்கு வராத கதை, தகடு, இத்தனை நாளாய் எங்கிருந்தாய் போன்ற படங்களில் ரீசன்டாக நடித்துள்ளார். தமிழ், மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்திலும் நடித்துள்ளார். நான்கு மொழிகளிலும் சுமார் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சபிதா ஆனந்த். சின்னத்திரையில் இவரது முதல் அறிமுகம் தூர்தஷன்தான். கடல் புறத்தில் என்ற சீரியலில் ஃப்ளோமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் நல்ல பாப்புலாரிட்டி கிடைத்தது.
பிறகு ராஜ்டிவியில் ரயில் ஸ்நேகம் என்ற தொடரில் நடித்தார். சன்டிவியின் கோகிலா எங்கே போகிறாள் தொடர்தான் இவரை தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஃபேமஸ் ஆக்கியது. தொடர்ந்து விஜய்டிவியின் காவ்யாஞ்சலி, ஏசியாநெட் சேனலில் ஓமனந்திங்கள் பக்ஷி, சினேக கூடு, சன்டிவியின் சொர்க்கம், கோலங்கள், பெண், ராஜ ராஜேஸ்வரி, சிவசக்தி போன்ற தொடர்களில் நடித்தார். பின்னர் சன்டிவியின் தியாகம், பிள்ளை நிலா சீரியலில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது தெய்வமகள் சீரியல்தான். அதில் சத்யாவின் அத்தையாக சரோஜா என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார்.
பின்னர் விஜய்டிவியின் மாப்பிள்ளை சீரியலில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1ல் அரவிந்த் அம்மாவாக கௌரி விஸ்வநாதன் என்ற ரோலில் நடித்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன்2வில் நாச்சியார் கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். ஜீ தமிழின் ரெட்டை ரோஜா சீரியலிலும் நடித்துள்ளார். திரைத்துறை மற்றும் சின்னத்துரையில் இவரது சிறப்பான நடிப்புக்காக பல விருதுகளை வென்றுள்ளார். தமிழ், மலையாள மொழிகளில் சீரியல், திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் என பிசியாக இருக்கிறார் இந்த 80’s கதாநாயகி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.