விஜய் டிவியின் பெரும்பாலான சீரியல்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் பாவம் கணேசன். இந்த தொடரில் KPY புகழ் நவீன் மற்றும் நேஹா கவுடா லீடு ரோலில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் குணவதி என்ற கேரக்டரில் நடித்து வரும் நேஹா கர்நாடகாவை சேர்ந்தவர். இவருடைய தந்தை கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட். பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் வேலை செய்துள்ளார்.
நேஹாவுக்கு சிறு வயதிலிருந்தே டான்ஸ் மீது மிகுந்த ஆர்வம். முறையாக வெஸ்டன் டான்ஸ் கற்றுக்கொண்டார். இவருடைய தங்கை சோனு கவுடாவும் நடிகைதான். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தியேட்டர் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்திருக்கிறார் நேகா. அப்பா சினிமாவில் இருந்ததால் இவருக்கும் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் படித்து முடித்த பிறகு தான் சினிமாவில் நுழைய வேண்டும் என வீட்டில் கூறியதால் பி.காம் படித்துள்ளார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே மாடலிங் செய்து வந்தார். பிறகு 2013ஆம் ஆண்டு “ஸ்வாதி சினுகுலு” என்ற கன்னட சீரியலில் தான் முதன் முதலில் அறிமுகமானார். முதல் சீரியலே நல்ல வரவேற்பை பெற்றது.
கன்னட சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தபோது தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சன்டிவியின் மிகவும் பிரபலமான தொடர் கல்யாண பரிசு. 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிப்பெற்ற இந்த தொடரில் லீட் ரோலில் நடித்தார். கல்யாணப்பரிசு காயத்ரியாக தமிழ் ரசிகர்களிடம் ரீச் ஆனார். கன்னடத்தில் “லட்சுமி பரமா” என்ற தொடரில் நடித்தார். நடிப்பில் பிஸியாக இருந்த சமயத்தில் 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான சந்தன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 10 ஆவது படிக்கும் போதிலிருந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
தற்போது நேஹா விஜய்டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாவம் கணேசன் தொடரில் நடித்து வருகிறார். குணவதி என்ற கேரக்டரில் ரவுடி பேபியாக கலக்கி வருகிறார். இவருடைய துணிச்சலான அழகான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இன்ஸ்டாவில் குணா கேரக்டருக்கு ஏராளமான ஃபேன்ஸ் பேஜஸ் உள்ளன. நேஹா சூப்பர் சேலஞ்ச், தகதிமிதா போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கன்டெஸ்டன்டாக கலந்துகொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானர். இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தமிழில் இரண்டு சீரியல்களில் மட்டுமே நடித்திருந்தாலும் நல்ல ரீச் ஆகியுள்ளார் நேஹா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil