14 வயதில் மலையாள அறிமுகம்... இப்போ சீரியலில் ஃபேவரைட் அம்மா.. பாவம் கணேசன் நடிகை லைஃப் ஸ்டோரி

vijaytv serial actress: 1996ல் சீரியலுக்கான க்ரிட்டிக்ஸ் விருது, 1999ல் கேரள மாநில விருது என பல விருதுகள் வாங்கியுள்ளார் பாவம் கணேசன் நடிகை-

vijaytv serial actress: 1996ல் சீரியலுக்கான க்ரிட்டிக்ஸ் விருது, 1999ல் கேரள மாநில விருது என பல விருதுகள் வாங்கியுள்ளார் பாவம் கணேசன் நடிகை-

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anila sreekumar

விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருபவர் சொர்ணம். இவரது நிஜப்பெயர் அனிலா ஸ்ரீகுமார். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர். இவர் ஒரு பாரம்பரிய நடன கலைஞர். தனது மூன்று வயதில் இருந்து கிளாசிக்கல் டான்ஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார். இப்போ டான்ஸ் மாஸ்ட்ராக 25 மாணவர்களுக்கு நடன பள்ளி மூலம் பயிற்சி கொடுத்து வருகிறார்.14 வயதிலேயே நடிக்க தொடங்கியுள்ளார். 1992ல் மலையாள சினிமாவில் தான் முதல் என்ட்ரி. சர்கம் என்ற படத்தில் நடித்தார். பிறகு பரிநாயம், சாந்தா, நிஞ்சனு பார்ட்டி போன்ற பல மலையாள திரைப்படங்களில் நடித்தார்.

Advertisment
publive-image

சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே 1995ல் சீரியலில் அறிமுகமானார். டிடி மலையாளத்தில் குளம், காந்தர்வயாமம், திரௌபதி, வம்சம், கார்த்திகா போன்ற சில சீரியல் தொடர்களில் நடித்தார். சீரியல்களில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியதால் சின்னத்திரையில் கவனம் செலுத்த துவங்கினார். தொடர்ந்து சூர்யா டிவி, ஏசியாநெட், அமிர்தா டிவி என 30க்கும் மேற்பட்ட மலையாள சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். திரைத்துறையில் அறிமுகமானாலும் சின்னத்திரையில்தான் அதிக சீரியல்களில் நடித்தார். தமிழில் முதன் முதலில் களத்து வீடு என்ற சீரியல் பண்ணியுள்ளார். ஆனால் அது சரியாக ஓடாததால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

publive-image
Advertisment
Advertisements

அதன் பிறகு இவருக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது விஜய்டிவியில் 2017ல் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல்தான். அன்னலெட்சுமி கதாபாத்திரத்தில் கனீர் குரல், மிரட்டும் கண்கள் என கெத்தாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். பிறகு காற்றின் மொழி சீரியலில் கண்மணியின் அம்மாவாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது பாவம் கணேசன் சீரியலில் சொர்ணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.

publive-image

திருமணத்துக்கு பிறகு திருவனந்தபுரத்தில் செட்டில் ஆகியுள்ளார். கணவர் ஸ்ரீகுமார் புரோடெக்ஷன் கம்பெனி வைத்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். பல நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். 1996ல் சீரியலுக்கான க்ரிட்டிக்ஸ் விருது, 1999ல் கேரள மாநில விருது என பல விருதுகள் வாங்கியுள்ளார். 2018ல் சின்னத்தம்பி சீரியலில் நடித்ததற்காக சிறந்த அம்மாவிற்கான விருது வாங்கியுள்ளார். 2019ல் சிறந்த மாமியாருக்கான விருது வென்றார். முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக வெள்ளித்திரையில் கலக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பாராம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Serial Actress Vijaytv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: