சினிமா அறிமுகம்.. சீரியல் சாக்லெட் பாய்… ராஜா ராணி சித்து பர்சனல் ப்ரொஃபைல்

vijaytv serial news: கடந்த 2014ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் வல்லினம் படம் மூலம் முதன் முதலாக அறிமுகமானார் சித்து

விஜய்டிவியின் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருபவர் சரவணன். இவரது நிஜப் பெயர் சித்து. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் ஒரு டான்ஸர் . சித்து விஜய்டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி மூலம் மீடியாவில் என்ட்ரி ஆனார். பிரிவென்று ஏதுமில்லை மற்றும் ஒரு கதை பாடட்டுமா சார் என்ற குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

அதன் பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் முதன் முதலாக அறிமுகமானார். அறிவழகன் இயக்கிய வல்லினம் படத்தில் நகுலுடன் நடித்தார். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்தார். உனக்கென்ன வேணும் சொல்லு, குற்றம் கடிதல், பீச்சாங்கை, ஒதைக்கு ஒதை, கமரக்கட்டு, மதுரை வீரன், அகோரி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் அவர் நடித்த பீச்சாங்கை திரைப்படம் 2017ன் சிறந்த திரைப்படம் . தோழா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அகோரி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

வெள்ளித்திரையில் தொடர்ந்து பல படங்களிலும் நடித்திருந்தாலும் பெரிதாக ரீச் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரைக்குள் நுழைந்தார். முதன் முதலில் கலர்ஸ் தமிழின் திருமணம் சீரியலில் ஹீரோவாக நடித்தார். இந்த தொடருக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதில் இவருடன் இணைந்து நடித்த ஸ்ரேயாவுக்கும் சித்துவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரிக்கு இளம் ரசிகர்கள் பட்டாளமே பேன்ஸ் ஆக இருந்தது. சின்னத்திரையின் ட்ரெண்டிங் பேர் ராக வலம் வந்தனர். இதனாலேயே இந்த சீரியல் பயங்கர ஹிட் ஆனது. அந்த தொடர் முடிந்த பிறகு சித்து விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார்.

ராஜா ராணி2 சீரியலில் ஆலியா மானசாவுடன் நடித்து வருகிறார். சரவணன் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் தற்போது டாப் லிஸ்டில் தான் உள்ளது. தனது எதிர்த்தமான நடிப்பால் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார் சித்து. Femina wedding fashion show 2019ல் கலந்துகொண்டுள்ளார். டிக்டாக் வீடியோஸ் பண்ணுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் தன்னுடன் திருமணம் சீரியலில் நடித்த ஸ்ரேயாவை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். வெள்ளித்திரையில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது சித்துவின் நீண்ட கால ஆசையாம்..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv serial raja rani2 actor saravanan siddhu biography

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com