மிஸ் ஆந்திரா போட்டி டூ சினிமா என்ட்ரி .. ராஜாராணி2 நடிகையின் பர்சனல் ப்ரொஃபைல்

Vijay Tv Actress : தமிழ்படம்2வில் இறுதி சுற்று ரித்திகா சிங்கைப் போல வந்து தாவும் சீனில் நடித்திருப்பார் நவ்யா.

navya suji

ராஜா ராணி2 சீரியலில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. இவருடைய சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் விஜயவாடா. மிஸ் ஏபி 2015 இல் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். இன்ஜினீரியங் முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். ஐடி ஃபீல்டுல வேலை பார்த்துக்கொண்டே மாடலிங் செய்து வந்துள்ளார். இவரது முதல் அறிமுகமே வெள்ளித்திரைதான். தமிழ்படம் 2 ஆடிஷன் நடந்துகொண்டிருந்தபோது ஃப்ரெண்ட்ஸ் மூலம் கேள்விப்பட்டு ஆடிஷன் அட்டர்ன் பண்ணியுள்ளார். இதில் செலக்ட் ஆகி படத்தில் நடித்திருந்தார். சிவா நடித்த தமிழ்படம்2வில் இறுதி சுற்று ரித்திகா சிங்கைப் போல வந்து தாவும் சீனில் நடித்திருப்பார். இந்த படம் அவரை வேற லெவலில் ரீச் ஆக்கியது.

தமிழ் படம் 2விற்கு கிடைத்த நல்ல வரவேற்பு அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்திலும் வெரைட்டியான ரோல்தான். வெங்கட் பிரபு திரையிட்டு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் திரில்லர் வலைத் தொடரிலும் நவ்யா நடித்திருந்தார். படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் விஜய் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். ராஜா ராணி 2 தொடரில் வேலைக்கார பெண்ணாக மயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நவ்யா. இவரது பட பட பேச்சு மற்றும் திறமையான நடிப்பு ரசிகர்களிடையே பெருமளவில் கவர்ந்து வருகிறது.

பல்வேறு இ-காமர்ஸ் தளங்களில் ஆடை, பாரம்பரிய நகைகள், வடிவமைப்பாளர் உடைகள் போன்ற பலவற்றிற்கு விளம்பர மாடலாக இருந்துள்ளார். டிவி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர். உடற்பயிற்சிகள் மூலம் தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்க விரும்புவார்.

சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர் நிவ்யா. விதவிதமான காஸ்டியூமில் ஃபோட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீரியலில் அவரை பாவடை தாவணியில் பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டாவில் அவர் பதிவிடும் மாடர்ன் புகைப்படங்களை பார்த்து அசந்து போயுள்ளனர். டிவி சீரியல்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள் என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நவ்யா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv serial raja rani2 mayil actress navya suji biography

Next Story
உடல் எடையைக் குறைக்க இந்த 3 விஷயம் முக்கியம் – விஜே ரம்யா டயட் டிப்ஸ்!Vijay Tv VJ Ramya Weight Loss Diet Tips Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express