Advertisment

மலையாள ஹீரோயின்.. சின்னத்திரையின் யங் வில்லி, பாசமான மம்மி.. சித்தி2 மீரா கிருஷ்ணா லைஃப் ஸ்டோரி!

கலைஞர்டிவியின் பொக்கிஷம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

author-image
WebDesk
Aug 17, 2021 17:31 IST
meera krishna

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதையாக நடித்து வருபவர் மீரா கிருஷ்ணா. கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். கேரளாவில் புகழ்பெற்ற, ‘கேரளா ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார். 3 வயதில் ஸ்டேஜ் டான்ஸ் ஆடியுள்ளார். மலையாள சினிமா, சீரியல் ஆர்டிஸ்டுகள் பலருக்கும் அந்த நிகழ்ச்சிதான் முதல் வெற்றி மேடை. பிறகு ‘மார்கம்’ படம் மூலமாக, சினிமாவில் ஹீரோயினா அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததற்காக கேரள மாநில அரசின் விருது பெற்றார்.

Advertisment

முதல் படம் வெற்றி அடைந்த பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் படிப்பில் கவனம் செலுத்த அனைத்தையும் மறுத்துவிட்டார். பிறகு மஞ்சுபோலொரு பெண்குட்டி, பிரேமா ராஜ்ஜியம் போன்ற படங்களில் நடித்தார். ஆங்கரிங், சீரியல் ஆக்டிங்னு படிப்பு பாதிக்காத வகையில், சின்னத்திரையில் ஆக்டிவா வொர்க் பண்ணியுள்ளார். சூர்யா டிவி, ஃபளவர்ஸ் , ஏசியொநெட் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்துள்ளார்.கல்லூரி முடித்ததும் கல்யாணம் ஆகி சென்னை கோடம்பாக்கத்தில் செட்டில் ஆகியுள்ளார். இவரது கணவர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருக்கிறார்.

பிறகு குழந்தைகள் , குடும்பப் பொறுப்புகள் என சினிமா பக்கம் வரவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் கலைஞர்டிவியின் பொக்கிஷம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதன்பிறகு இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது சன்டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல்தான். வசந்தி என்கிற கேரக்டரில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இவரது ரோலுக்கு நல்ல ரீச் கிடைத்தது. பல வருடங்களுக்கு பிறகு தனது நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்தாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சன் குடும்பம் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த அம்மாவுக்கான விருது வாங்கியுள்ளார்.

பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார். தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தாள் ஸ்ரீதேவி தொடரில் நடித்தார். தற்போது சன்டிவியின் டாப் சீரியல் சித்தி2வில் நந்தாவின் அம்மாவாக நடித்து வருகிறார். எப்போதும் பாசிட்டிவ் கேரக்டரில் நடிப்பவர் இதில் வில்லியாக நடித்துள்ளார். விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடரிலும் தீபக்கின் அம்மாவாக நடித்து வருகிறார். இந்த தொடரில் பிஸினஸ் உமனாக நடிக்கிறார். இவரது நடிப்பு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு 36 வயதுதான் ஆகிறது.இருந்தும் தன் வயதுள்ள ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கிறார். பெரியத்திரையில் விஜய்சேதுபதியுடன் அக்கா அல்லது அம்மா ரோலில் நடிக்க ஆசையாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Suntv Serial #Chithi 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment