Advertisment

இன்ஜினியரிங் டூ ஆக்டர்... வேலைக்காரன் சீரியல் வள்ளி ப்ரொஃபைல்!

vijaytv serial news: தமிழில் முதன்முதலில் கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் கோமதி ப்ரியா.

author-image
WebDesk
New Update
gomathi priya

வேலைக்காரன் சீரியலில் வ;s நடித்து கலக்கி வருபவர் கோமதி ப்ரியா. மதுரையில் படிப்பை முடித்த இவர் இன்ஜினியரிங் விருப்பப்பட்டு படித்துள்ளார். பிறகு 10 மாதங்கள் சென்னையில் துறை சார்ந்த வேலை பார்த்து வந்தார். ஒரு நல்ல வேலையில் இருந்தாலும் அதன் மீது அவருக்கு பிடிப்பு ஏற்படவில்லை. மீடியா மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதனால் நடிக்கலாம் என முடிவெடுத்து குறும்படங்களுக்கான ஆடிஷன் அட்டர்ன் பண்ணியுள்ளார். இவரது நிறத்தை வைத்து பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. எனினும் தொடர் முயற்சியால் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

Advertisment
publive-image

பாலாவின் டைரக்‌ஷனில் ஒரு படத்தில் ஒரு சின்ன நர்ஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால், அந்த படம் பாதியில் நின்றது. பிறகு கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடர் மூலம் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனார். ஓவியா டைட்டில் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்ததுமே, கோமதிப்பிரியாவை அவருடைய அம்மா உட்பட யாரும் ஒரிஜனல் பெயரில் அழைக்கவில்லையாம். ஓவியோ என்றே கூப்பிட ஆரம்பித்துள்ளனர். தற்போது விஜய்டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வருகிறார். இதிலும் ஜமீன் குடும்பத்தில் வேலை செய்யும் பெண்ணாக நடித்து ரசிகர்களின் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறார்.

publive-image

ஜீ தெலுங்கிலும் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தொடரில் நடித்து வருகிறார். நடிகையான பிறகு தான் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இவருக்கு ஜோதிகா மிகவும் பிடித்த நடிகை. சாப்பாட்டு பிரியரான இவர் நீண்ட தூர பயணங்களை ரொம்பவே விரும்புவாராம்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவர் அவ்வபோது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். நல்ல முறையில் நடித்து ஆடியன்ஸ் மத்தியில் ரீச் ஆக வேண்டும் என்பது இவரது விருப்பமாக உள்ளது. நல்ல சப்ஜெக்டுகள், கேரக்டர்கள் வந்தால் சினிமாவில் நடிப்பாராம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Colors Tv Serial Actress Gomathi Priya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment