காஸ்டியூம் டிசைனர் டூ ஃபேமஸ் வில்லி… தமிழும் சரஸ்வதியும் சுஷ்மா நாயர் பயோகிராபி!

Vijaytv Serial: தமிழ் சின்னத்திரையில் முதன் முதலில் சுமங்கலி சீரியல் மூலம் அறிமுகமானவர் சுஷ்மா நாயர்.

sushma nayir

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடரில் அறிமுகமாகி உள்ளார் சுஷ்மா நாயர். நாயகி சீரியலில் அனன்யாவாக நடித்து பிரபலமானவர். கேரளாவை சேர்ந்தவர். பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே சினிமா மீது தனி ஆர்வம். டான்ஸ், ஆக்டிங், மேக்கப் எல்லாம் ரொம்ப பிடித்த ஒன்று. நிறைய ஸ்டேஜ் ப்ரோகிராமில் பங்கேற்றுள்ளார். பள்ளி படிப்பை முடித்த பின்பு ஆடை வடிவமைப்பு பற்றி படிக்க ஆசைப்பட்டு படித்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும் இரண்டு கன்னட படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றினார். அதில் ஒரு படத்தில் சைக்கோ கேரக்டரில் நடித்திருந்தார்.

இவரது நடிப்பை பார்த்து நடிகர் சுஜித் தமிழ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என சுஷ்மாவை அணுகியுள்ளார். அப்படிதான் தமிழ் சின்னத்திரையில் சுமங்கலி சீரியல் மூலம் அறிமுகமானார். நெகட்டிவ் ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து சன்டிவியில் சூப்பர் ஹிட் அடித்த நாயகி தொடரில் வில்லி கேரக்டரில் நடித்து ரொம்பவே ரீச் ஆனார் சுஷ்மா நாயர். நாயகி சீரியல் அனன்யா என்றால் மறக்கமுடியாத வில்லி. சின்னத்திரையின் அழகான யங் வில்லி. இவரது வில்லத்தனமான நடிப்புக்கு ஆடியன்ஸிடம் பயங்கர ரெஸ்பான்ஸ். சன் குடும்பம் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த வில்லிக்கான விருதும் வாங்கியுள்ளார்.

சீரியலில் இவர் நடித்துக்கொண்டிருந்தபோது துபாய்க்கு பேஷன் ஷோவுக்காக சென்றுள்ளார். துபாயில் நடந்த பேஷன் ஷோவில் கலந்துகொண்டு இவரது டிசைனிங்க்காக விருதும் வாங்கியுள்ளார். அதன்பிறகு திருமகள் சீரியலில் நடித்திருந்தார். தற்போது விஜய்டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளார். சுஹாசினி என்ற ரோலில் பாசிட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். சுஷ்மா தல ரசிகர். விதவிதமான ஆடைகளை உடுத்தி வரும் சுஷ்மா சொந்தமாக ஆடைகளை வடிவமைக்கும் பொட்டிக்கும் வைத்து நடத்தி வருகிறார். சீரியல்களில் இவர் உடுத்தும் காஸ்டியூம்களுக்கு தனி ஃபேன்ஸ்.

சுஷ்மாவுக்கு 7 மொழிகள் தெரியுமாம். இவருக்கு பிடித்த சீரியல் கோலங்கள்தான். சிறுவயதில் அந்த தொடரை விரும்பி பார்ப்பாராம். நாயகி சீரியல் முடிந்தபிறகு கிரிக்கெட் கோச்சை காதல் திருமணம் செய்து கொண்டார். சமுக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அடிக்கடி ஃபோட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். ரன்வீர் சிங்க்கு Costume பண்ணனும்னு ரொம்ப ஆசையாம். நடிப்பை பொறுத்தவரையில் ஒரு நல்ல Social Activist-டோட Biopic எடுத்து நடிக்க வேண்டும் என்பது சுஷ்மாவின் ஆசையாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv tamizhum saraswathiyum suhasini actress sushma nayir biography

Next Story
பிக் பாஸ் தொடர்ந்து என்னதான் ஆச்சு? – மனம் திறக்கும் பிக் பாஸ் ஓவியா!What happened to Bigg Boss Oviya Tamil news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com