அஜய்தேவ்கன்-கஜோலின் கோவா வில்லா: ஒரு இரவு வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன்-கஜோல் தம்பதியின் ஆடம்பர கோவா பங்களா, இப்போது பொதுமக்களுக்கு வாடகைக்குக் கிடைக்கிறது. உயர்தர அனுபவத்தை விரும்பும் பயணிகளுக்காக ஒரு இரவுக்கு ரூ.75,000 முதல் ரூ.1.3 லட்சம் வரை வாடகைக்கு கிடைக்கிறது.
பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன்-கஜோல் தம்பதியின் ஆடம்பர கோவா பங்களா, இப்போது பொதுமக்களுக்கு வாடகைக்குக் கிடைக்கிறது. உயர்தர அனுபவத்தை விரும்பும் பயணிகளுக்காக ஒரு இரவுக்கு ரூ.75,000 முதல் ரூ.1.3 லட்சம் வரை வாடகைக்கு கிடைக்கிறது.
அஜய்தேவ்கன்-கஜோலின் கோவா வில்லா: ஒரு இரவு வாடகை எவ்வளவு தெரியுமா?
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான அஜய் தேவ்கன்-கஜோல் தம்பதி திரையில் மட்டுமல்லாமல், திரைக்கு வெளியேயும் தங்கள் நேர்த்தியான ரசனைக்கு பெயர் பெற்றவர்கள். மும்பையில் உள்ள அவர்களின் வீடு 'ஷிவ் சக்தி' பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களுக்குச் சொந்தமான கோவாவில் உள்ள 'வில்லாஎடர்னா' (VillaEterna) என்ற பங்களா ஆடம்பரமும் அமைதியும் நிறைந்த தனித்துவமான இடமாக உள்ளது.
Advertisment
மோய்ரா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த போர்த்துகீசிய பாணி பங்களா, இப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்படுகிறது. டாஜ் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் இந்த பிரமாண்டமான வீடு, அஜய் தேவ்கன்-கஜோல் ஆகியோரின் எளிமையான, ஆனால் நேர்த்தியான வடிவமைப்பு ரசனையை வெளிப்படுத்துகிறது.
இந்த வில்லாவின் மையத்தில் பிரமாண்டமான நீச்சல் குளம் அமைந்துள்ளது. வளைவான வராண்டாக்கள், உயரமான பச்சைப் பனை மரங்கள், அமைதியான நீரூற்றுக்கள் என போர்த்துகீசிய கட்டிடக்கலையுடன், ஆடம்பரமான சோஃபாக்கள் மற்றும் நவீன கலைப் பொருட்கள் என நவீன வசதிகளையும் இந்த வீடு இணைக்கிறது. குளத்தின் அருகில் அமைந்துள்ள 'கெஸீபோ' (gazebo) நிழல் தரும் கூடமாக அமைந்துள்ளது. வீட்டைச் சுற்றிலும் சீராக பராமரிக்கப்படும் புல்வெளி, மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் ஓய்வெடுக்க சிறந்த இடமாக உள்ளது. ஒரு நூற்றாண்டு பழமையான கிணறு மற்றும் வெளிப்புற பார் ஆகியவை இந்த வீட்டிற்கு தனித்துவமான அழகை சேர்க்கின்றன. அதேசமயம், இந்த இடம் அதன் இயற்கையான அழகையும், அரிய அமைதியையும் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
5 படுக்கையறைகளைக் கொண்ட இந்த வீட்டில், ஒவ்வொரு அறையும் தோட்டம் (அ) நீச்சல் குளத்தின் காட்சிகளை அளிக்கிறது. மரத்தாலான தளவாடங்கள், கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணி வகைகள், வசதியான ஓய்வெடுக்கும் இடங்கள் என அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உணவு மேசையில் உள்ள பாத்திரங்கள் கூட இந்த தம்பதியால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சரவிளக்குகள், கலைப் பொருட்கள் மற்றும் மிதமான வெளிச்சம், அஜய் மற்றும் கஜோலின் நேர்த்தியான பாணியை பிரதிபலிக்கின்றன.
Advertisment
Advertisements
தேவைப்பட்டால் ஒரு தனிப்பட்ட சமையல்காரரும் ஏற்பாடு செய்யப்படுவார். மேலும், முதல் தளத்திற்குச் செல்லும் லிஃப்ட்டுக்கு அருகில், அஜய் மற்றும் கஜோலின் புகழ்பெற்ற படக்காட்சிகளின் புகைப்படத்தொகுப்பு சுவரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வில்லா எடர்னா பங்களாவில் ஒரே நேரத்தில் 12 பெரியவர்கள் வரை தங்கலாம். ஒரு இரவுக்கு ரூ.75,000 என்ற விலையில் வாடகைக்குக் கிடைக்கிறது. இருப்பினும், உண்மையான வாடகை ஒரு இரவுக்கு ரூ.1.1 லட்சம் முதல் ரூ.1.3 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாலிவுட் நட்சத்திரங்களின் தனித்துவமான ரசனையுடன், அமைதியான மற்றும் உயர்தர ஓய்வு பயணத்தை விரும்புபவர்களுக்கு இந்த பங்களா மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும்.