Village Cooking Channel Periyathambi hospitalized | Lifestyle: தமிழில் மிகவும் பிரபலமான குக்கிங் யூடியூப் சேனலாக வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் உள்ளது. சுமார் 2.4 கோடி சப்ஸ்கிரைபர்ஸ்களுக்கு மேல் உள்ள இந்த சேனலில் கிராமத்து சமையல் குறித்த வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த சேனலை சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்து மாணிக்கம் ஆகிய சகோதரர்களுடன் தாத்தா பெரிய தம்பி நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தை தளமாக கொண்டு இந்த யூடியூப் சேனல் இயங்கி வருகிறது. இவர்களது சமையல் வீடியோவில், பெரிய தம்பி தாத்தா கூறும் 'இன்னைக்கு ஒரு புடி' டயலாக் படுபேமஸ். இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் உண்டு
வயதான காலத்திலும் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு பெரிய தம்பி தாத்தா செய்யும் சமையல் பார்ப்போர் அனைவரையும் வியக்க வைக்கும். அவரது வேகம் இளைஞர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில், பெரிய தம்பி தாத்தா-வுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், இதய நோய் காரணமாக பெரிய தம்பி தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும், அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனவும் வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலின் அட்மின் சுப்பிரமணியன் வேலுசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“