விழுப்புரத்தில் சங்க கால தொல்பொருட்கள் கண்டறியப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், தென்னமாதேவி மற்றும் அயனாம்பாளையம் கிராமங்களில் பம்பை ஆற்றின் வடகரைப் பகுதியில் சங்க கால தொல்பொருட்கள் கண்டறியப்பட்ட இடத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ. சிவா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன், தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் முனைவர் சிவானந்தம், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
செய்தி - பாபு ராஜேந்திரன்.