சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனுக்கும் பல்லவ மன்னர்களுக்கும் இடையில் ஏற்பட்டது. அந்தப் போரில் ராஜராஜ சோழன் வெற்றிகொண்டதால் மரக்காணம் கிராமத்தில் ஒரு சிவன் ஆலயத்தை கட்டி உள்ளார். இந்த ஆலயத்தை 'பூமி ஈஸ்வரர்' கோவில் என மரக்காணம் மக்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள்.
தற்போது இந்தக் கோவில் கட்டி ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், இந்த கோவிலுக்கு கடைசியாக 1969 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்ததாகவும், அதன் பின்பு 2001 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்ததாகவும் மரக்காணம் மக்கள் கூறுகிறார்கள். இந்த சூழலில், மூன்றாவது முறையாக வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி (கார்த்திகை 5 ஆம் தேதி) குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த கோவிலுக்கான புனரமைப்பு பணிகள், இந்து அறநிலை துறை சார்பில் ரூபாய் 75 லட்சம் செலவில் நடந்துள்ளது. யாகசாலை மட்டும் உள்ளூர் மக்களால் அமைக்கப்பட்டு, கோவில் குடமுழக்கு பணிகள் நடந்து வருகிறது.
வீடு கட்டி இழுபறியில் உள்ளவர்கள், இடங்கள் விற்காமல் இருப்பவர்கள் என சிக்கல் ஏற்படுத்திய நிலங்களை விற்பனை செய்வதற்காக, பெரும்பாலான மக்கள் நிலத்தின் மண்ணை எடுத்து வந்து இங்கு பூஜை செய்கிறார்கள். அப்படி பூஜை செய்யும் போது, அந்த நிலம் உடனடியாக விற்று விடும் என்பது ஐதீகமாக என நினைத்து வருகின்றனர்.
இந்தக் கோவிலில் ராஜராஜ சோழனின் வெற்றி கல்வெட்டுகள் அதிகமாக உள்ளது. இத்திருக்கோயில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் வழியில் மரக்காணம் என்ற நகரப் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“