கோடையில் கிடைக்கும் இந்த பழம்… கல்லீரலை சுத்தப்படுத்தும்; டாக்டர் மைதிலி

கோடைகால உணவில் ஆரோக்கியமான பானங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்த கோடை காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் வில்வ பழச்சாறு உட்கொள்வதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

கோடைகால உணவில் ஆரோக்கியமான பானங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்த கோடை காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் வில்வ பழச்சாறு உட்கொள்வதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
மைதிலி

கோடை காலத்தில் வில்வ பழச்சாறு குடிப்பதால், உடல் சூடு அதிகமாகாமல் சமநிலையில் வைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்பினால், வில்வ ஜூஸில் 140 ஆரோக்கியமான கலோரிகள் இருப்பதால், எடை இழப்புக்கு நல்லது என்கிறார் மருத்துவர் மைதிலி.

Advertisment

வில்வம் நார்ச்சத்து நிறைந்த பழம். கடுமையான மலச்சிக்கல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வில்வ பழச்சாறு அருந்துவதால், உடலில் கெட்ட நச்சுக் கழிவுகள் இருந்தால் அவற்றை சுத்தம் செய்வதுடன், கெட்ட கொழுப்பை எரித்து கட்டுப்படுத்தும். தொடர்ந்து, வில்வ பழச்சாறு அருந்துவதால், மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு மிக குறைவு என்கிறார் மருத்துவர் மைதிலி.

இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை சீரான முறையில கொண்டு போய் சேர்ப்பதனால் இதயம் ஆரோக்கியமாக வலுவடையும். உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகப்படுத்த கூடிய தன்மையும் வில்வா பழச்சாறுல அதிகமாக உள்ளதால், இன்ஸ்டன்ட் எனர்ஜி ட்ரிங்க்னு என்றே வில்வ பழச்சாறை சொல்லலாம்.

குடல் பகுதில தேங்கி இருக்கக்கூடிய கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றம் செய்து செரிமானத்தை சீராக்கும் தன்மை கொண்டது வில்வப் பழச்சாறு. அஜீரணம், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கும் வில்வ பழச்சாறு உதவியாக இருக்கும் என்கிறார் மைதிலி.

Advertisment
Advertisements

வில்வ பழச்சாறில் வைட்டமின் சி, ஊட்டச்சத்துகள் இருப்பதால், நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. வைரஸ் தொற்று பாதிப்பு, சளி, இருமல், காய்ச்சல் இதெல்லாம் ஏற்படக் கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. உடல் உறுப்புகளைத் தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது. கல்லீரல்லில் தேங்கி இருக்கக் கூடிய கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றுகிறது. 

மஞ்சள் காமாலை, சிறுநீரகம், இரைப்பை புண், கிட்னி கல் உருவாகக் கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. சிறுநீரகத்தில் தேங்கி இருக்கக்கூடிய நச்சுக் கழிவுகளை அகற்றி ஆரோக்யமாக செயல்பட வைக்கும். வில்வ பழச்சாறு குடிக்கும்போது ஞாபக சக்தியும் நல்ல அதிகப்படுத்த முடியும். படிக்கிற குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுத்து ஞாபக சக்தி நல்ல அதிகப்படுத்த முடியும் என்கிறார் மருத்துவர் மைதிலி.

Vilvam fruit juice

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: