Ganesh Chaturthi Pooja Date Time: இந்தியாவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகளில் ஒன்று தான் விநாயக சதுர்த்தி. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஏன் எதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட முறை, பிரசாதம், பூஜை முறைகள் பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம். விநாயகரின் பிறந்த தினத்தையே செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி (இன்று) விநாயகர் சதுர்த்தி வருகிறது.
இதையொட்டி விநாயகர் சிலைகளை வீடுகள், வீதிகளில் முக்கிய சந்திப்புகள், கோவில்கள் உள்பட பல இடங்களில் வைத்து வழிபடுவார்கள். 9 நாள் பூஜைக்கு பிறகு, செப்டம்பர் 12-ம் தேதி விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக இருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைக்கு விநாயகர் சிலை, மல்லிகை, தாமரை, எருக்க மலர், சிவப்பு சந்தனம், பழங்கள், வெற்றிலை, அருகம்புல், கொழுக்கட்டை, தேங்காய், கற்பூரம், நெய்விளக்கு, உணவு ஆகியவை தேவை. இவை அனைத்தும் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தவை.
விநாயகர் சதுர்த்தி பூஜைகள் மதிய நேரமே பெரும்பாலும் நடத்தப்படுகிறது. காரணம், விநாயகர் மத்தியான வேளையில் பிறந்ததாக ஐதீகம் இருக்கிறது. பூஜையின்போது புராண மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. பூஜையை தொடங்குவதற்கு முன் சங்கல்பா செய்யப்படுகின்றன. 16 விதமான தோஷ உபச்சார பூஜை செய்யப்படுகிறது. மந்திரம் ஓதுவது, விநாயகர் சிலையை அலங்கரிப்பது, பிரசாதம் படைப்பது ஆகியவை இதில் அடங்கும்.
Vinayagar Chathurthi 2019 Pooja Date, Time
Vinayagar Chathurthi Pooja 2019 Date, Time- விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்
விநாயகர் சதுர்த்தி தேதி: 2019 செப்டம்பர் 2, திங்கட் கிழமை
விநாயகர் சிலை கரைப்பு தேதி: 2019 செப்டம்பர் 12, வியாழக்கிழமை
விநாயகர் பூஜைக்கு ஏற்ற நேரம்: காலை 11.05 மணி முதல் 1:36 மணி வரை
சதுர்த்தி திதி தொடங்கும் நேரம்: 2019 செப்டம்பர் 2, அதிகாலை 4:57
சதுர்த்தி திதி முடியும் நேரம்: 2019 செப்டம்பர் 3, அதிகாலை 1:54
பக்தர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.