Vinayagar Chaturthi 2020: இந்து மதத்தின் முழு முதல் கடவுளாகக் கருதப்படும் விநாயகர் பிறந்தநாள் இன்று. இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோயால் வழக்கமான உற்சாகம் குறைந்துள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளிலேயே சிறப்பான முறையில் விநாயகரை வழிப்பட்டு வருகிறார்கள். மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைத்து தரிசிக்கலாம். அவருக்கு படைக்கும் முக்கியமான பொருட்களில் ஒன்று கொழுக்கட்டை. அதை எளிதாக செய்யும் முறைகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
* தேங்காய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக சமைக்கும்போது, அதிகப்படியான ஈரப்பதம் ஆவியாகி வறண்டு போகும் வரை சமைக்க வேண்டியது அவசியம். இருப்பினும், அளவுக்கதிகமாக வேக விடாதீர்கள்.
* எப்போதும் ஃப்ரெஷ் தேங்காயைப் பயன்படுத்துங்கள்.
Advertisment
Advertisements
* 1 கப் அரிசி மாவை வழக்கமான 1 கப் தண்ணீரை விட சற்று அதிகமாக சேர்த்தால் தான் சரியான பதம் கிடைக்கும்.
* விரிசல் மற்றும் ஒட்டும் தன்மை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய, மாவில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தூவி மீண்டும் பிசையவும். இது ஒரு நல்ல டெக்ஸரை தரும். மாவை சரியாக பிசைவது மென்மையான மற்றும் கிராக் இல்லாத கொழுக்கட்டையை செய்வதற்கான ட்ரிக்ஸ்.
* மாவு தயாரிக்கும் போது, ஒரு கடாயில் ½ கப் தண்ணீரை விட சற்று அதிகமாக ஊற்றி, அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள்.
* அடுப்பு குறைவாக இருப்பதை உறுதிசெய்து, படிப்படியாக 1 கப் அரிசி மாவை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் வாணலியை மூடி, அடுப்பை அணைக்கவும். அது சிறிது குளிரட்டும்.
* மாவை சம பாகங்களாக பிரிக்கவும். ஈரமான துணியால் அதை மூடி வைக்கவும்.
* கொழுக்கட்டை செய்யும் போது, ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் விரல்களை நனைக்கவும். பந்து வடிவில் மாவை உருட்டி, மையத்தை குவித்து, உள்ளே பூரணத்தை வைக்கவும்.
* தேவைப்படும் போது விரல்களை தண்ணீரில் நனைக்கவும். மாவு ஒட்டும் என்றால், தண்ணீருக்கு பதிலாக நெய்யைப் பயன்படுத்தலாம்.
* கொழுக்கட்டை ஒழுங்காக வெந்துள்ளதா என்று பார்க்க, ஒரு பக்கத்தில் தொடவும் என செஃப் சஞ்சீவ் கபூர் அறிவுறுத்துகிறார். வெளிப்புற உறை உங்கள் கைகளில் ஒட்டவில்லை என்றால், அது சாப்பிட தயாராக உள்ளது என அர்த்தம்.
ஒருவேளை நீங்கள் முதன்முறையாக கொழுக்கட்டை செய்பவராக இருந்தால், குறைந்த அளவு மாவில் செய்துப் பாருங்கள்.