Advertisment

உரிமை குரல் எழுப்பிய அந்த பெண்ணியவாதிகள் எங்கே? நிக்சன் 'பாடி ஷேமிங்' கமெண்ட்டுக்கு வினுஷா கேள்வி

நிக்சன் இதை என்னிடம் சொன்னதாகவும் இவை அனைத்தும் எனக்குத் தெரியும் என்றும் பொய் சொல்கிறார். இல்லை எனக்கு தெரியாது.

author-image
WebDesk
New Update
Vinusha nixen

Nixen body shaming comment about Vinusha

விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Advertisment

குறிப்பாக சொல்லப் போனால், அர்ச்சனா, விசித்ராவை அங்கிருக்கும் மற்ற பெண் போட்டியாளர்கள் இப்போது டார்கெட் செய்துள்ளனர். மாயா, பூர்ணிமா அணிக்கு இப்போது ரசிகர்களிடம் இருந்தும் பயங்கர எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஏற்கெனவே கொதித்துக் கொண்டிருக்கும் வீட்டில் எண்ணெய் ஊற்றுவது போலத்தான் நேற்று பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கும் இருந்தது

வீட்டில் உள்ளவரை பற்றி சிலர் அவதூறாக பேசிய ஸ்டேட்மெண்ட் டிவியில் ஒளிபரப்பட்டது. அதை பேசியது யார்? எதற்காக அப்படி பேசினோம் என்று போட்டியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

இதில் பிராவோ பற்றி மாயாவும், ஐஷூவும் மோசமாக பேசியது ரசிகர்களை கூட முகம் சுளிக்க வைத்தது.

இதுபற்றி பிராவோ கேட்க, ’அப்போது உங்களைப் பற்றி தெரியாது என்பதால், ஃபன்னாக அப்படி பேசினோம். ஆனால் நீங்கள் ஒரு ஜெண்டில் மேன்’ என்று மாயாவும், ஐஷூவும் மழுப்பலாக பதில் சொல்லினர்..

அடுத்தது வினுஷா பற்றி நிக்சன் சொன்ன பாடி ஷேமிங் கமெண்ட்.

 

அது டிவியில் ஒளிபரப்பான போது, எழுந்து வந்து பேசிய நிக்சன் நான் தவறான எண்ணத்தில் கூறவில்லை. இது பற்றி வினுஷாவுக்கு கூட தெரியும் என்றெல்லாம் பேசினார்.

அப்போது விசித்ரா, இப்போது வினுஷா வீட்டில் இல்லை என்றாலும் நான் அவளுக்காக கேட்பேன் என்று நிக்சனை சாடினார்.

பிரதீப்பால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியதில் நிக்சனும் உண்டு. ஆனால் இப்போது அவரே ஒரு பெண்ணை பற்றி மோசமாக கமெண்ட் செய்து விட்ட்தாக ரசிகர்கள் எரிச்சல் அடைந்தனர்.

இந்நிலையில் இப்போது நிக்சன் தன்னை பற்றி பேசிய பாடி ஷேமிங் கமெண்ட் பற்றி வினுஷா தன் இன்ஸ்டாவில் பேசியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் #STANDINGFORMYSELF என்ற ஹேஷ்டேக் உடன் அவர் எழுதியது இங்கே,

நான் இப்போது பிக் பாஸ் வீட்டில் இல்லை, ஆனால் நான் இதைப் பற்றி பேசவும், எனக்காக நிற்கவும் விரும்பினேன். முதல் வாரத்தில், நிக்சனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது, நான் அவரை உண்மையாகவே ஒரு சகோதரனாக நினைத்தேன். நான் அவருடன் அப்படித்தான் நடந்து கொண்டேன்,

ஆரம்பத்தில், அவர் என்னை ட்ரோல் செய்யத் தொடங்கியபோது நான் கவலைப்படவில்லை, அது நன்றாக வேடிக்கையாக இருந்தது என்று நினைத்தேன்.

இருப்பினும், போகபோக, அவர் எல்லைகளைக் கடக்கத் தொடங்கினார், மேலும் அவரது நடவடிக்கைகள் என்னைக் காயப்படுத்தியதால் அதை நிறுத்தும்படி நான் அவரிடம் கேட்க வேண்டியிருந்தது. இந்த நடத்தைக்காக நான் அவரை நாமினேட் செய்தேன். ஒரு நாள், அவர் மன்னிப்பு கேட்டார், ஆனால் அது ட்ரோலிங் செய்ததற்கு மட்டும் தான். என்னைப் பற்றிய பாடி ஷேமிங் கமெண்ட்டுக்கு அல்ல.

சில விஷயங்களை  தெளிவாக கூற விரும்புகிறேன்.

நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது நிக்சன் மன்னிப்பு கேட்கவில்லை அல்லது என்னைப் பற்றி பாடி ஷேமிங் பேசவில்லை.

நிக்சன் இதை என்னிடம் சொன்னதாகவும் இவை அனைத்தும் எனக்குத் தெரியும் என்றும் பொய் சொல்கிறார். "இல்லை எனக்கு தெரியாது".

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகுதான் நான் அதைப் பற்றி அறிந்தேன்.

நிக்சன் இப்போது மன்னிப்பு கேட்டாலும் அது நிக்சனை நல்ல நபராக மாற்றாது.

"என்னை ஆட்சேபிப்பது நிச்சயமாக எனக்கு வேடிக்கையாகவோ நகைச்சுவையாகவோ இல்லை"- இதுதான் புல்லி கும்பலுக்கான எனது பதில்

கடந்த வாரத்தில் "உரிமை குரல்" எழுப்பிய அந்த பெண்ணியவாதிகள் எங்கே?

எனக்காக பேசியதற்கு நன்றி விச்சு மா

நான் வீட்டில் இருக்கும்போது நிக்சன் மீது நிறைய மரியாதை வைத்திருந்தேன். அவர் எனக்கு ஏற்படுத்திய வலி இருந்தபோதிலும், ஒரு சகோதரனைப் போல நினைத்தேன்.

இருப்பினும், அவர் என்னைப் பற்றி கூறிய வீடியோ மற்றும் கருத்தைப் பார்த்த பிறகு, நான் அவர் மீதான மரியாதையை இழந்துவிட்டேன்.

வார இறுதி எபிசோடில் கமல் சார் இதைப் பற்றி பேசுவார் என்று நம்புகிறேன்.

இந்த பிரச்சினையில் நிக்சனுக்கு எதிராக நிற்கும் மக்களுக்கும், எனக்காக நிற்கும் மக்களுக்கும் நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன்

-வினுஷா தேவி ஜி

இப்படி வினுஷா இன்ஸ்டாவில் உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார்.

வினுஷாவின் இந்த பதிவுக்கு பிபி ரசிகர்களும் ஆதரவு அளித்து கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment