உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஜூன் 30ஆம் தேதிவரை வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் திருக்கோவிலில் விடுமுறை மற்றும் விசேச நாள்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்த நேரங்களில் பக்தர்கள் அதிகளவில் காணப்படுவார்கள். இதனால், வரும் ஜூன் 30ஆம் தேதிவரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை கொடுத்துள்ளது. கோடை விடுமுறையால் திருப்பதி கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது.
நேற்று திருப்பதியில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் பெருங்கூட்டமாக காத்திருந்தனர். இதனால் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் கிட்டத்தட்ட 24 மணி நேரம் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“