virat kohli anushka sharma day out : இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. விராட் கோலியுடன் வழக்கம் போல் அனுஷ்கா சர்மாவும் சென்றுள்ளார்.
ஓய்வு நேரத்தில் விராட் கோலி தனது மனைவி மற்றும் சக கிரிக்கெட் வீரர்களுடன் என்ஜாய் செய்து வருகிறார். மேற்கிந்திய தீவுகளில் உள்ள பீட்ச்களில், ரெஸ்டாரண்டுகளில் அனுஷ்கா சர்மாவுடன் சுற்றி திரிகிறார். அப்போது அதிகளவில் செல்பியும் எடுத்து மகிழ்கிறார். இந்த புகைப்படங்களை அனுஷ்கா உடனுக்குடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
விளையாட சென்ற இடத்தில் என்ன வேலை இது? என்ற விமர்சனம் எழாமல் இல்லை. இருந்த போதும் அனுஷ்கா மற்றும் விராட் எதையும் கண்டுகொள்ளவதாக தெரியவில்லை. இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகின்றன.
மேற்கிந்திய தீவில் உள்ள அண்டிகுவா ஜாலி கடற்கரையில் விராட் கோலி சக இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு குளியல் போட்டார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
விராட் கோலியுடன் பும்ரா, கே. எல் ராகுல் பீட்சில் ஆட்டம் போட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
இத்துடன் விராட் கோலி, புகழ்பெற்ற செய்ட்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளிக்கவுள்ளார். இதற்கான டீசரும் வெளியாகியுள்ளது.