விராட் கோலி, ஒரு பேட்டியில் ராஜ்மாவை வைத்து செய்யும் ராஜ்மா சாவல் ரெசிபி தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி உள்ளார். இதை நீங்கள் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு ராஜ்மா 4 கப்
பட்டர் 2 ஸ்பூன்
அரை கப் வெங்காயம்
1 ஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் இஞ்சி நறுக்கியது
1 ஸ்பூன் பச்சை மிளகாய் நறுக்கியது
1 ஸ்பூன் பூண்டு நறுக்கியது
1 கப் தக்காளி நறுக்கியது
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
கால் ஸ்பூன் கரம் மாசாலா
உப்பு
செய்முறை : ராஜ்மாவை கழுவி குக்கரில் வேக வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் பட்டர் சேர்த்து, அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும் வெங்காயம் நிறம் மாறியதும், பூண்டு, மிளகாய், இஞ்சி நறுக்கியதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் தக்காளியை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கரம் மாசாலாவை சேர்த்து கிளரவும். தொடர்ந்து நன்றாக வெந்ததும், அதில் ராஜ்மாவை சேர்த்து கிளரவும். வேண்டும் என்றால் தண்ணீர் சேர்த்து கிரேவி போல் செய்யலாம் .