வசமாக மாட்டிக் கொண்ட விராட் கோலி.. ஒரு விளம்பரத்துக்கு 82 லட்சம்!

கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று

இன்ஸ்டாகிராமில் ஸ்பான்சர் போஸ்ட் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ரூ. 82.5 லட்சம் சம்பாதிப்பது தெரிய வந்துள்ளது.  இதன் மூலம் விளம்பரம் செய்வதன்மூலம் அதிகமாக வருமானம் ஈட்டுவோர் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலி இடம்பிடித்துள்ளார்.

ஹோப்பர்எச்கியூ.காம் என்ற இணையதளப்பக்கம், இன்ஸ்டாகிராமில் இருக்கும் நட்சத்திரங்களின் ஃபாலோயர்கள், பதிவுகள் என பலவற்றை அலசி ஆராய்ந்து பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட்டை வைத்து  எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டது.

அதில் இந்திய அணியின் கேப்டன் விராட்  கோலி 17 வது இடம் பிடித்துள்ளார். அவர், இன்ஸ்டாகிராமில் விளம்பரங்கள் பகிர்வதன் மூலம் ரூ.82.5 லட்சம் வருமானம் பெறுகிறார். இந்தியா சார்பில் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பிரபலம், கோலி மட்டுமே. அவரை 23.2 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் அவர் பேட்டோ ஒன்றை போஸ்ட் செய்தால் அதற்கு லட்சக்கணக்கான லைக்கும், ஆயிரக்கணக்கான ஷேரும் கிடைக்கிறது.இந்த லிஸ்டின் முதலிடத்தில் அமெரிக்காவின் மாடன் அழகியும், செய்தி தொகுப்பாளருமான கெய்லி ஜென்னரும், இரண்டாமிடத்தில் செலீனா கோமேஸும், மூன்றாவது இடத்தில் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அவர் பதிவிடும் ஒரு போஸ்ட் மூலம் கூட இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்று தகவல் பலரையும் திகைக்க வைத்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close