வீராட் கோலி தனக்கு பிடித்த உணவு தொடர்பாக கொடுத்தப் பேட்டியில் வெஜ் பிரைட் ரைஸ், செய்யும்போது முக்கிய மாற்றம் செய்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் சுப்பிரமணியன் என்பவர் வீராட் கோலியை பேட்டி எடுத்துள்ளார். அப்போது வீராட் கோலி வெஜ் பிரைட் ரைஸ் செய்யும்போது, காய்கறி வேக வைத்த தண்ணீர் அதாவது வெஜிடபிள் ஸ்டாக் பயன்படுத்தி செய்தால், கூடுதல் சுவையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வீராட் கோலி சொல்வதுபோல, அதன் ரெசிபியை தற்போது தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
1 கப் பிரவுன் ரைஸ்
2 கப் வெஜிடபிள் ஸ்டாக்
1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
1 வெங்காயம் நன்றாக நறுக்கியது
2 பூண்டு இடித்தது
1 கேரட் நறுக்கியது
1 குடை மிளகாய் நறுக்கியது
½ கப் பச்சை பட்டணி
2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் ( குறைந்த அளவு சோடியம் கொண்டது)
1 டீஸ்பூபன் இஞ்சி துருவியது
உப்பு
மிளகு தூள்
செய்முறை : பிரவுன் ரைஸை வேக வைக்க வேண்டும். பாதி வெந்ததும், வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய், நறுக்கிய வெங்காயம், கேரட், குடை மிளகாய், இஞ்சி துருவியது, பச்சை பட்டணி சேர்த்து வதக்க வேண்டும். சிறிது நேரத்தில் சோயா சாஸ் சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். பிரைவுன் ரைஸ் சேர்த்து கிளரவும். உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“