விருதுநகர் ஸ்பெஷல்... சுடச்சுட கரண்டி ஆம்லெட்!!!

முட்டையை வைத்து செய்யப்படும் தி பெஸ்ட் டிஷ் எதுவென்று தேடினால், பட்டியலில் முதலிடம் கரண்டி ஆம்லெட்டுக்கு தான்

ஆம்லெட்டை பல வெரைட்டிகளில் தயார் செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை தரும் அதிலொன்று தான் கரண்டி ஆம்லெட். வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இந்த கரண்டி ஆம்லெட் ஜோரான டிஷ்.

சிலருக்கு வேக வைத்த‍ முட்டை பிடிக்கும். சிலருக்கு ஆஃப் பாயில் பிடிக்கும், சிலருக்கு முழு ஆம்லேட் பிடிக்கும், சிலருக்கு இந்த முட்டை ஆம்லேட் டோடு சிறிது வெங்காயம், மிளகுத்தூள் கலந்த ஆம் லேட் பிடிக்கும். இப்படி முட்டையை வைத்து 100 மெனுவை கொடுக்கலாம்.

ஆனால் கூகுளில் போய் முட்டையை வைத்து செய்யப்படும் தி பெஸ்ட் டிஷ் எதுவென்று தேடினால், பட்டியலில் முதலிடம் கரண்டி ஆம்லெட்டுக்கு தான். அதிலையும் , விருதுநகர், புதுக்கோட்டை, மதுரை கரண்டி ஆம்லெட்டுக்கள் டாக் ஆஃப் டவுன்ஸ்.

வெறும் முட்டை ஆம்மெட்டிற்கு இவ்வளவு பில்லடாப்பானு நெனைக்கிறவங்க கண்டிப்பா இதையெல்லாம் சாப்பிட்டு தான் பேசணும். சரி விஷயத்திற்கு வருவோம்.. வாரந்தோறும் ஒவ்வொரு ஸ்பெஷல் உணவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த வாரம், விருதுநகர் ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட்…

தேவையான பொருட்கள்:

1. முட்டை
2. வெங்காயம்
3. பச்சை மிளகாய்
5.மிளகுத்தூள்
6.உப்பு
7. கொத்தமல்லி
செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

2, பின்பு, ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

3. அதன் பின்பு, மிளகுத் தூள் தூவி, கலக்கி வைத்திருக்கும் முட் டையை ஊற்றவும். சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

4. இப்போது சுடச்சுட கரண்டி ஆம்லெட் தயார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close