ஆரஞ்சு மற்றும் இஞ்சி பானம்
ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. ஆரஞ்சு மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் . அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஒரு தம்ளரில் எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் ஆரஞ்சு சாறு, 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுக்கு குட்பை சொல்லிவிடலாம். மேலும் இது உடல் உறுப்புகளுக்கும் ஓய்வை கொடுத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
மாம்பழம் , கிவி பழ பானம்
அமெரிக்காவின் வேளாண்மைத் துறையின் தரவுகளின்படி, மாம்பழத்தில் வைட்டமின் சி 60 சதவீதம் உள்ளது. மாம்பழங்களில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் புரதத்தை உடலில் சுரக்க உதவி புரிகிறது. இரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத் திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால், வயதான தோற்றத்தை வெளிப்படுத்துவதை மாம்பழம் தள்ளி வைக்கும். முகப்பருவை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது. ஏனெனில் சருமங்களில் அடைப்பட்ட துவாரங்களை விடுவிக்க அது உதவும். இந்த துவாரங்கள் திறந்தவுடன் முகப்பருக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். அடைப்பட்ட துவாரங்களை நீக்கி விடுவதே முகப்பருவை நிறுத்த உதவும் சிறந்த வழி. இந்த பயனை அனுபவிக்க எப்போதும் மாம்பழம் சாப்பிட வேண்டியதில்லை. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் மாம்பழ கூழை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.
கிவிபழத்தின் நன்மைகள் : சிட்ரஸ் வகை பழங்களுள் கிவி பழம் மிகவும் சுவையானதாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. கிவிப் பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கலந்தது. ஆனாலும் அது ஆரோக்கியத்துக்கு முக்கியமானது. மாம்பழத்தையும் கிவி பழத்தையும் சேர்த்து பானம் செய்து குடித்து வந்தால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
மாம்பழ சூப்
மிக்ஸியில் மாம்பழம், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு நன்கு அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது கூடவே ஆலிவ் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். அத்துடன் எலுமிச்சை சாறு, புதினா, சர்க்கரை மற்றும் 150 மிலி தண்ணீர் சேர்க்கவும். பின் அதில் உப்பு மற்றும் மிளகு தூவவும். பொடியாக நறுக்கிய புதினாவை தூவி குளிர வைத்து பரிமாறலாம்.