மோசமான தூக்கம், பரம்பரை, வயது, மன அல்லது உடல் அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உணவுக் குறைபாடுகள் ஆகியவை கருவளையங்களை ஏற்படுத்தும். கருவளையம் இன்று உலகளாவிய பிரச்சனையாக எழுந்துள்ளது. தூங்கும் முறை, நீண்ட திரை நேரம் மற்றும் வீங்கிய கண்கள் போன்ற பல, கருவளையம் வருவதற்கு காரணமாகிறது.
கண்களுக்குக் கீழே கருவளையங்கள் எவ்வாறு உருவாகின்றன?
மோசமான தூக்க முறை மட்டுமல்ல, பரம்பரை, வயது, மன அல்லது உடல் அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், உணவுக் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் கருவளையங்கள் உருவாக வழிவகுக்கும். அதிகப்படியான சூரிய ஒளியும் ஒரு காரணம், இது சருமத்திற்கு அதன் நிறத்தை கொடுக்கும் மெலனின் உற்பத்தியை உடலில் அதிகளவில் உருவாக்குகிறது.
நாம் வயதாகும்போது, தோல் மெலிந்து, கொழுப்பு மற்றும் கொலாஜனை இழப்பதன் மூலம், உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள சிவப்பு-நீல இரத்த நாளங்கள் அதிகமாகத் தெரியும். அதனால்தான் தடுப்பு தீர்வுகள் சிறப்பாக செயல்படுகின்றன. வறட்சி(Dryness) போன்ற முதுமையின் முதல் அறிகுறிகளை ஒருவர் கவனிக்க ஆரம்பித்தவுடன், அவர்கள் பிற்கால கட்டத்திற்காக காத்திருப்பதை விட கவனித்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.
பல்வேறு வகையான கருவளையங்கள் என்ன?
நான்கு வகையான கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உள்ளன. உங்களுடையது எந்த வகையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிய உதவும் எளிய வழி: கண்ணிமை தோலை லேசாக நீட்ட வேண்டும் - ஒன்று உங்கள் கண் இமைகள் சற்று நீல நிறத்தில் இருப்பதை காண்பீர்கள். இல்லையெனில், கண்களுக்குக் கீழே உள்ள பழுப்பு வட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது.
நீல நிற கருவளையங்கள் என்பது, கண் இமைகளின் மெல்லிய தோல் வழியாக மேலோட்டமான இரத்த நாளங்கள் காணப்படுவதன் விளைவாகும். இவை நரம்புகள் தொடர்பான கண்கீழ் கருவளையங்கள். இதனால் கண்கள் வீங்கிக் காணப்படும் அல்லது எந்த மாற்றமும் தெரியாது.
பழுப்பு நிற கருவளையங்கள் தோலில் உள்ள நிறமியின் விளைவாகும். இது பரம்பரையாக இருக்கக்கூடியது. அதுமட்டுமின்றி, இது முகத்தில் உள்ள கொழுப்பு இழப்பால் ஏற்படும் பள்ளங்களுடன் தொடர்புடைய கட்டமைப்பு பகுதியின் காரணமாகவும் இருக்கலாம். இதனால் முக எலும்பு அமைப்பு காரணமாக கண்களுக்குக் கீழே உள்ள பிளவு சற்று கருமையாகத் தோன்றும்.
டியர் டிராஃப் கருவளையங்கள் (tear trough dark circles), வெறுமனே கட்டமைப்பின் நிழலால் ஏற்படுகின்றன.
தோல் அழற்சி அல்லது கண்களை அதிகமாக தேய்ப்பதன் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் கருவளையங்களும் உள்ளன.
வைட்டமின் சி ஏன் சிறப்பாக வேலை செய்யும்
வைட்டமின் சி உங்கள் சருமத்தை பலப்படுத்துகிறது. "இது கொலாஜனை உருவாக்கி, சருமத்தை அதிக மீள்தன்மையாக்குகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம், வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் ஃப்ரீ ரேடிக்கல் வெளிப்பாட்டால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது. இது சருமத்தின் விறைப்பு மற்றும் பளபளப்பை மீட்டெடுக்க உதவுகிறது.
வைட்டமின் சி மேற்பூச்சு பயன்படுத்தப்படலாம், ஆனால் இது இயற்கையில் ஆபத்தானது, அதனால்தான் தோல் மருத்துவர் அறிவுறுத்துகிறார்: வைட்டமின் சியின் சரியான செறிவு 10 சதவீதமாக இருக்க வேண்டும். இது தோலை வறட்சியாக்கும். எனவே அதை அதை ஒரு ட்ரை-பெப்டைட் காம்ப்ளக்ஸ் அல்லது ஹைலூரோனிக் அமிலத்துடன் இணைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”