’விட்டமின் டி’யின் சிறப்பும் அதன் தேவைகளும்!

குழந்தைகளுக்கு நல்ல எலும்பும், பல்லும் பெற வைட்டமின் ‘டி’ மிக அவசியம். பால், பால் பொருட்கள், மீன், மீன் எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் ‘டி’ கிடைக்கின்றது.

Vitamin-D, sun light, lifestyle
Vitamin D

‘இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் பெரும்பாலானோர் வைட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறது தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (National Institution of Nutrition).

உலகிலேயே ஒரு ரூபாய்கூடச் செலவில்லாமல் எளிதாகக் கிடைக்கும் ஒரே சத்து, வைட்டமின் டி மட்டும்தான்.

உடல் உபயோகத்திற்கான கால்ஷியம், பாஸ்பரசில் வைட்டமின் டி மிக முக்கிய பங்காற்றுகின்றது. சிறு குடலில் இருந்து நன்கு கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் உருவாகவும், பாதுகாக்கப்படவும் இந்த வைட்டமின் ‘டி’யே காரணமாகின்றது. திசுக்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றது.

குழந்தைகளுக்கு நல்ல எலும்பும், பல்லும் பெற வைட்டமின் ‘டி’ மிக அவசியம். பால், பால் பொருட்கள், மீன், மீன் எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் ‘டி’ கிடைக்கின்றது. இத்தோடு சூரிய ஒளியில் சருமமே வைட்டமின் ‘டி’யை உற்பத்தி செய்கின்றது. ஒரு வயது முதல் ஐம்பது வயது வரை ஒருவருக்கு 15 மைகி வைட்டமின் ‘டி’ தேவைப்படுகின்றது.

இளம் காலை வெயில், மாலை வெயில் பொழுதில் கை, கால், முகத்தில் வெயில் படும் படி 10 நிமிடங்கள் இருக்கலாம். அதிக நேரம் வெயிலில் இருப்பவர்கள் ‘சன் ஸ்கீரின்’ அவசியம் உபயோகிக்க வேண்டும். வைட்டமின் ‘டி’ குறைபாடு ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் எனப்படும் வளைந்த கால்கள், பெரியோருக்கு எலும்பு அடர்த்தி குறைதல் ஏற்படுகின்றது.

நன்மைகள்…

எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்யும். நம் உடல், கால்சியத்தை உறிஞ்ச உதவும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலும்புப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்கும். தசைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். சரும நோய்களிலிருந்து பாதுகாக்கும். மூட்டுகளில் உண்டாகும் வலியைத் தடுக்கும் குணம் இதற்கு உண்டு. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க உதவும். திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

அறிகுறிகள்…

முதுகுவலி, தசைவலி, உடல் சோர்வு ஏற்படும். சிலருக்கு உடலில் இனம்புரியாத வலி இருக்கும். என்ன பரிசோதனை செய்து பார்த்தாலும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இது போன்ற பிரச்னைக்கு ஆளானவர்கள் வைட்டமின் டி பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.

குறைந்தால்…

`ரிக்கட்ஸ்’ என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிறு உப்புசம். எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள், நரம்புகளில் பாதிப்பு உண்டாகும். பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.
மேலும் ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு தீவிரமாக ஆரம்பித்தால், அவர் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். மேலும் வைட்டமின் டி குறைபாடு, குறிப்பிட்ட சில நோய்களுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது.

உதாரணத்துக்கு, வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்துமா பிரச்சினை ஏற்படலாம். அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி சத்து உடலுக்குக் கிடைத்தால், அது நுரையீரலை வலிமைப்படுத்தும், சுவாசப் பாதையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கும்.

வைட்டமின் டி மற்றும் கால்சியம், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, வலிமைப்படுத்தும். இதனால் எலும்புகள் பலவீனமாவதும் எலும்பு முறிவு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

வைட்டமின் டி குறைபாடு இருந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட நேரிடும்.

இதய நோய் மற்றும் ரத்த அழுத்தத்துக்கும் வைட்டமின் டி குறைபாட்டுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆகவே இப்பிரச்சினைகள் வராமல் தவிர்க்க, தினமும் போதுமான வைட்டமின் டி கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமான விஷயம், உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால், அது மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மன இறுக்கத்தை உண்டாக்கும்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vittamin d uses and benefits

Next Story
கரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா? தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க!!importance and uses of sugarcane juice - கரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா? தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X