உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்களும், தாதுக்களும் அவசியமான ஊட்டச்சத்துகளாக விளங்குகின்றன. எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள் இருக்கின்றன என்று தெரியுமா?
வைட்டமின் ஏ பொதுவான உடல் வளர்ச்சி மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது. பற்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கிறது. கேரட், ஆரஞ்சு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, முலாம்பழம். இவை அனைத்திலும் கரோட்டின் நிறமி அதிகளவில் இருக்கிறது.
இந்த வைட்டமினால்தான் எலும்பு வளர்ச்சி, பல் வளர்ச்சி, திசுக்களின் வளர்ச்சி நோய் எதிர்ப்பு சக்தி இவை அனைத்திற்கும் இந்த வைட்டமினே பொறுப்பு. சருமம், கண், வாய் உள்தசை, மூக்கு, தொண்டை, நுரையீரல் இவை ஈரப்பதத்தோடு இருப்பதும் இந்த வைட்டமினையே சார்ந்துள்ளன.
மேலும் தாவர வகையிலிருந்து அடர்ந்த பச்சை நிறம் கொண்ட இலைகள், காய்கறிகள், காரட், பரங்கிகாய் இவையெல்லாம் வைட்டமின் ‘ஏ’ கிடைக்கும் உணவுப் பொருட்கள்.
சராசரி தேவையாக ஆணுக்கு 900 மைகி 1 பெண்ணுக்கு 700 மைகி அளவு இது தேவைப்படுகின்றது. வைட்டமின் ‘ஏ’ கல்லீரலில் தேக்கி வைக்கப்படுகின்றது. சொரசொரப்பான வறண்ட சருமம், எளிதில் உடல் நோய் வாய் படுதல், எலும்பு வளர்ச்சி குறைபாடு போன்றவை வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் ஏற்படும்
கண்களின் ஆரோக்கியம்
அதிக வெளிச்சம், குறைந்த வெளிச்சம் இவற்றிக்கு கண் தன்னை சரி செய்து கொள்வதற்கு இந்த வைட்டமின் ஏ தான் காரணம். இரவு கண் தெரியாமை, வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் ஏற்படும் நோய்களில் ஒன்று பார்வை சரியின்மை, கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவு பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டசத்து உணவுகளை சாப்பிடுவது கண் நோய்கள் வராமல் காக்கும்.
வைட்டமின்கள் சி மற்றும் ஈ, கரோட்டினாய்டுகள், பீட்டா கரோட்டின், லூடீன் மற்றும் ஜியாசாந்தின் ஆகியவற்றை உள்ளடக்கிய உணவு பொருட்கள் கண்களின் நலனை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. வைட்டமின்கள் பி6, பி9, பி12 ஆகியவற்றில் போலிக் அமிலம் நிரம்பி யிருக்கிறது. ஆகையால் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டுவர வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள்
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள் அதிக சோர்வு, தொடர்ச்சியாக தொற்று ஏற்படுதல், ப்ளூ, சளி மற்றும் தொண்டை புண், அழற்சிகள், காயங்கள் ஆற நாளாகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தமாகும். இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள் இருந்தா கண்டிப்பாக நாங்க சொல்லியுள்ள சில விஷயங்களை தினமும் நீங்க கடைப்பிடித்து வந்தாலே போதும் இந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
வைட்டமின் ஏ, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (increase immunity) தன்மை வாய்ந்தது. அதுவும் உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகளை அழிப்பதில் மிகவும் வலிமை வாய்ந்தது. கேரட், பச்சைக்காய்கறிகள், தக்காளி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யா பழம் ஆகியவற்றில் இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.
முகப்பரு
வைட்டமின் ஏ குறைபாட்டால் முகப்பரு ஏற்படுகின்றது. இதை தடுக்க வேண்டும் என்றால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எதாரணமாக கேரட்.
கேரட்
கேரட்டில் வைட்டமின் ஏ சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம். 100 கிராம் பேரட்டில் 836mcg வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. அடுத்து ஈரல் ஆடு, கோழி போன்றவற்றின் ஈரலில் கூட வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கீரை ஆகியவற்றில் அதிகம் உள்ளது.
ஆரோக்கியமான எழும்புகளுக்கு வைட்டமின் ஏ
முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது. கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். இந்த உயிர்சத்து குறைந்தால் எலும்புகளும் பாதிப்படையும்.
ஆண்மைக்கு வைட்டமின் ஏ
கருவுற்ற ஒரு தாய்க்கு வைட்டமின் ஏ முக்கியம். வைட்டமின் ‘ஏ‘ என்பது குழந்தைகளுக்கு 1500 முதல் 6000 இன்டர்நேஷனல் யூனிட்டுகளும், பெரியோர்களுக்கு 5000 யூனிட்டுகளும், கர்ப்பிணிகளுக்கு 6000 யூனிட்டுகளும், பாலூட்டும் தாய்மார்களுக்கு 5000 யூனிட்டுகளும் தான் தேவை. இதனை கவனத்தில் கொண்டு இந்த அளவில் கிடைக்கும் சத்தூட்ட பானங்களை சரியான அளவில் அவரவர் பயன்படுத்துவதே உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.