“பலனில்லை என்றால் என் பெயரையே மாற்றிக்கொள்கிறேன்” – அஞ்சனா ஸ்கின்கேர் சேலஞ்

VJ Anjana Rangan Beauty Skincare Tips Tamil தினமும் இந்த ஐஸ் டீ கட்டியை முகத்தில் தேய்த்தால் நிச்சயம் முகப்பரு, பொலிவற்ற சருமம் உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்

VJ Anjana Rangan Beauty Skincare Tips Tamil
VJ Anjana Rangan Beauty Skincare Tips Tamil

VJ Anjana Rangan Beauty Skincare Tips Tamil : தொகுப்பாளினியாக ‘சின்னத்திரை ராணி’ என்று நீண்ட நாள்களாக அரியணையில் சிம்மாசனமிட்டிருந்தவர் அஞ்சனா ரங்கன். தொகுப்பாளினியாக மட்டுமல்ல, அவருடைய உடை, ஆபரணங்கள் உள்ளிட்டவற்றைக் காண்பதற்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிரபலங்கள் பலரும் யூடியூபில் களம் இறங்கிவிட்டனர். அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் அஞ்சனா.

நான்கு காணொளிகள் மட்டுமே அப்லோட் செய்யப்பட்டிருக்கின்ற இந்த சேனலில் வழக்கம்போல அழகுக் குறிப்புகள் வீடியோதான் உள்ளன. வீட்டிலிருந்தபடியே சருமத்தை அவர் எப்படிப் பாதுகாத்துக்கொள்கிறார் என்பதை மக்களோடு பகிர்ந்திருக்கிறார். நிச்சயம் அவை பலருக்கு உபயோகமாக இருக்கும்.

“நானும் எல்லோரைப் போலவே ஏராளமான பொருள்களை வாங்குவேன். ஆனால், அவற்றை உபயோகிப்பதில்தான் சிக்கல். தொடர்ந்து பயன்படுத்தத் தவறிவிடுவேன். ஆனால், வீட்டிலேயே இருக்கும் சில எளிய பொருள்களை வைத்து சருமத்தைப் பராமரிக்கலாம். ஏராளமான மேக்-அப் பொருள்கள், ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியும், என் சருமம் ஓரளவிற்கு வலுவிழக்காமல் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் இந்த ஹோம் ரெமடிகள்தான்.

“நான் சொல்லும் இந்த டிப்ஸ்களை இடைவிடாமல் தொடர்ந்து பின்பற்றினால், நிச்சயம் உங்கள் சருமம் பொலிவாகும். அப்படி இல்லையென்றால் என் பெயரையே மாற்றிக்கொள்கிறேன்” என்கிற குறிப்போடு ஆரம்பித்தார் அஞ்சனா. “முதலில் நிறையத் தண்ணீர் குடிப்பது அவசியம். அவ்வளவுதானா என்று சொல்லாதீர்கள். உங்களில் எத்தனை பேர் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்கிறீர்கள்? ஏற்கெனவே வெய்யில் தலையைப் பிளக்கையில், அவ்வளவு வியர்வை வெளியேறுகையில், அதனை ஈடுசெய்யத் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். வயிறு, சருமம் என எல்லாவற்றையும் சுத்தம் செய்யும் சக்தி தண்ணீருக்கு உள்ளது. உங்களுக்கென்று தனி பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்க எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பது தெரியும்.

அடுத்தபடியாக, உடல் சூடு, வாய்ப்புண், வயிற்றுப்புண் என உங்கள் உடலுக்குள் எந்தவித பிரச்சனை ஏற்பட்டாலும், அதற்கான மிகப் பெரிய மருந்து பழைய சாதம். காலையில் எழுந்ததும் பழைய சாதம் ஊறவைத்த தண்ணீரைக் குடித்தாலே போதும். முகத்தில் இருக்கும் பருக்கள் வடுக்கள் தெரியாமல் மறையும். அதேபோல தலை மேல் கால் வரை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கும் சருமத்திற்கும் அவ்வளவு நல்லது. வெறும் நான்கு வார இறுதிக்கு இதனை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள். அன்று மட்டும் உடலுக்கு சோப்புக்கு பதிலாக பயித்தம் மாவு தேய்த்து குளிக்கலாம். தலைக்கு சீயக்காய் நல்லது.

க்ரீன் டீ தயாரித்து, அதனை ஃப்ரீசர் ட்ரேயில் வைத்து, தினமும் இந்த ஐஸ் டீ கட்டியை முகத்தில் தேய்த்தால் நிச்சயம் முகப்பரு, பொலிவற்ற சருமம் உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vj anjana rangan beauty skincare tips tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com