10 வருஷத்துக்கும் மேல தொகுப்பாளினியா இருக்கும் அஞ்சனாவுக்கு ஆக்டிங்ல ஜீரோ இண்ட்ரெஸ்ட்!

VJ Anjana :  2008 ஆம் ஆண்டில் அஞ்சனாவுக்கு "மிஸ் சின்னத்திரை" விருது வழங்கப்பட்டது.

By: Updated: November 13, 2019, 01:01:09 PM

Tamil TV Star’s Lifestyle : 10 ஆண்டுகளுக்கு மேலாக தொலைகாட்சி தொகுப்பாளினியான, சின்னத்திரையில் பயணித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்திருப்பவர் வி.ஜே.அஞ்சனா.

VJ Anjana biography and lifestyle கணவர் குழந்தையுடன் அஞ்சனா

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.


அப்படி கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல். சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

VJ Anjana biography and lifestyle டிரடிஷனல் லுக்…

பின்னர் கர்ப்பமான அஞ்சனா, தொலைக்காட்சியிலிருந்து பிரேக் எடுத்தார். அவருக்கு கடந்த வருடம் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்த சன் குழுமத்திலிருந்து விலகி, தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகாழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

VJ Anjana biography and lifestyle மார்டன் மங்கை அஞ்சனா

சென்னையில் பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் அங்கேயே முடித்தார். 2008 ஆம் ஆண்டில் அஞ்சனாவுக்கு “மிஸ் சின்னத்திரை” விருது வழங்கப்பட்டது. இந்த விருது தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் திறமையான மற்றும் நேர்த்தியான நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது. சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என ஸ்ட்ரிக்டாக தவிர்த்து விட்டார் அஞ்சனா.

VJ Anjana biography and lifestyle வி.ஜே.அஞ்சனா

நண்பர்களுடன் இணைந்து ‘பிளான் பி’ என்ற ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் முன்னணி நடிகைகளுக்கு நிகராக பாலோயர்களை வைத்திருக்கும் அஞ்சனா, தளபதி விஜய்யின் வெறித்தன ரசிகையும் கூட.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Vj anjana rangan sun music zee tamil lifestyle

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X