VJ Anjana: சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா. தனது தனித்துவமான ஆங்கரிங் ஸ்டைலால், ரசிகர்களைக் கவர்ந்தவர்.
வி.ஜே.அஞ்சனா
சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.
கணவருடன் அஞ்சனா...
அப்படி கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல். சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.
அஞ்சனாவின் அழகிய குடும்பம்
சென்னையில் பிறந்து வளர்ந்த அஞ்சனா, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளி படிப்பையும், MOP கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார். அதன் பின்னர் சன் மியூஸிக்கில் தனது கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு ‘ஃப்ரியா விடு, வாழ்த்துகள்’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார்.
அஞ்சனாவின் அன்பு மகன்
திருமணத்துக்குப் பிறகும், சன் மியூஸிக்கில் பணியைத் தொடர்ந்த அஞ்சனா, கர்ப்பமானதும் தொலைக்காட்சிக்கு பிரேக் கொடுத்தார். குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் சன் மியூஸிக்கிற்கு அஞ்சனா விஜயம் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ தான் அந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக அதிர்ச்சி கிளப்பினார்.
இளைஞர்களின் ஃபேவரிட் அஞ்சனா
அதனைத் தொடர்ந்து ஜி தமிழ், புதுயுகம் ஆகிய சேனல்களில் நிகழ்ழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். 2008 ஆம் ஆண்டில் அஞ்சனாவுக்கு “மிஸ் சின்னத்திரை” விருது வழங்கப்பட்டது. இந்த விருது தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் திறமையான மற்றும் நேர்த்தியான நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது. சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என ஸ்ட்ரிக்டாக தவிர்த்து விட்டார் அஞ்சனா.
டிரடிஷனல் லுக்கில் அஞ்சனா...
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருக்கும் அஞ்சனாவின் மற்றுமொரு பக்கம் சுவாரஸ்யமானது. ‘பிளான் பி’ எனும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இணை இயக்குநராக இருக்கும் இவர், இதன் மூலம் பல கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
பிங்க் கலர் மீது தீரா காதல் கொண்டுள்ள அஞ்சனாவுக்கு, கணவர் மற்றும் மகனுடன் நேரம் செலவிடுவது தான் பிடித்த பொழுதுபோக்காம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.