scorecardresearch

‘ஒரு மாதத்திற்கு முன் டைவர்ஸுக்கு ரெடி ஆனேன்… அப்புறம் ஸாரா…’ ரகசியம் உடைத்த அர்ச்சனா

பிரபல டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா தானும் தனது கணவரும் 1 மாதத்திற்கு முன் விவாகரத்து செய்ய முடிவு செய்ததாகவும் பின்னர் தங்கள் மகள் ஸாராவால் அந்த முடிவை கைவிட்டதாக அர்ச்சனா உருக்கமாக கூறினார்.

Archana Chandoke
Archana Chandoke

சன் டி.வியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சி மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பாளராக அர்ச்சனா அறிமுகமானார். அவரின் கலகலப்பான பேச்சு திறமை, அழகாள் 90-கிட்ஸ்களில் ஃபேவரெட் ஆனார். அதன் பின் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறி சென்றார். முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைல் பலரையும் கவர்ந்தது.

இந்தநிலையில் விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் அவரின் செயல்களால் பெரிதும் விமர்சனம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார். அர்ச்சனா- வினீச் தம்பதியினருக்கு ஸாரா என்ற மகள் உள்ளார். அவர் பள்ளி படித்து வருகிறார். இவரும் அர்ச்சனாவுடன் இணைந்து அவ்வப்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். அர்ச்சனா கணவர் வினீச் கப்பல் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் அண்மையில் அர்ச்சனாவின் 23 ஆண்டுகாலப் பணியைப் போற்றும் வகையில் Celebrating 23 Years of Archana என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அர்ச்சனா, அவரது தாயார், மகள் ஸாரா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அர்ச்சனை தானும் தனது கணவரும் 1 மாதத்திற்கு முன் விவாகரத்து செய்ய முடிவு செய்தாக கண் கலங்கிய படி உருக்கமாக கூறினார். தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்ததாகவும் இது தங்களது வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தியாகவும் அவர் கூறினார்.

இந்த நேரத்தில் ஸாரா இருவரிடம் பேசி இருக்கிறார். அவர்களிடத்தில் நீங்கள் ஒருவரை விட்டு ஒருவர் வாழ்ந்து விட முடியுமா? என்பதை யோசித்து முடிவெடுங்கள் எனக் கூறியுள்ளார். இதன் பின்னர் நாங்கள் விவாகரத்து முடிவை கைவிட்டோம்.

கடந்த 15 நாட்களாக நாங்கள் 20 வருடத்திற்கு முன்பு முதல் முதலாக சந்தித்த தருணம் முதல் அனைத்தையும் பேசி மீண்டும் வாழ்ந்தோம். இப்போது சொல்கிறேன் வினீச் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அவர் என் உயிர் என்று அர்ச்சனா உருக்கமாக கூறினார். நிகழ்ச்சியில் கணவர் வினீச் அர்ச்சனாவிற்காக வீடியோ ஒன்று பதிவு செய்து அனுப்பியிருந்தார். இதன் பின் தான் அவர் இதைப் பற்றி தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vj archana says she applied for divorce 1 month before but zaara asked us one question