/tamil-ie/media/media_files/uploads/2021/07/Ac.jpg)
VJ Archana turns back to home health condition update Tamil News
VJ Archana turns back to home health condition update Tamil News : பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட அர்ச்சனா, சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு மூளையை சுற்றி இருக்கும் டிஷ்யூவில் ஒரு பகுதியில் ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வழியாக மூளைப்பகுதியிலிருந்து திரவ நீர் வெளியேற ஆரம்பித்திருக்கிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். அறுவை சிகிச்சை மூலம்தான் இதனை சரிசெய்ய முடியும் என்கிற நிலையில் 24 மணிநேரத்தில் சிகிச்சை முடிந்து இப்போது நலமாக இருக்கிறார். இதுபற்றி சமீபத்தில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் காணொளி மூலம் பகிர்ந்துகொண்டார் அர்ச்சனா.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Ac1.png)
"வாழ்க்கையை முழுமையாக வாழவேண்டும் என்பதைதான் இவ்வளவு நாள் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், இன்றைய நாளை முழுமையாக வாழவேண்டும் என்று அதனை மாற்றிக்கொள்கிறேன். ஏனென்றால், நாளை என்ற ஒன்று இருக்குமா என்று நமக்கு தெரியாது. எப்போதும் கணீரென்று பேசும் அர்ச்சனாவின் குரல் நடுங்குகிறதே. அவருக்கு எல்லாம் நினைவில் இருக்கிறதா? போன்ற வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டேன். இதற்கு மேல் எனக்கு பேச சக்தியே இல்லை.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Ac3.png)
மறுபுறம், நான் யாரு, எப்படி பழகுவேன் போன்ற எதுவுமே தெரியாமல், எனக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. எனக்காக நீங்க சீக்கிரம் நல்லபடியா திரும்பி வாங்க என்று சொன்ன ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். இவர்களையும் தாண்டி, நான் சிலருக்கு ரொம்ப கடமை பட்டிருக்கிறேன். அதில் முதலில் சிம்ஸ் மருத்துவமனை. கொரோனாவாக இருக்குமோ என்கிற பயத்தில் சென்றபோது, ஏராளமான பரிசோதனைகள் கடந்து இதுதான் பிரச்சனை என்று கண்டுபிடித்து, 24 மணிநேரத்திற்குள் என்னை மீட்டுக்கொண்டு வந்தனர். இதற்காக உதவி செய்த அத்தனை மருத்துவர்களுக்கும் மிகப் பெரிய நன்றி.
என்னுடன் பணியாற்றிய அனைவரும் எனக்காக வேண்டிக்கொண்டு என் நலனை விசாரித்து வந்த அனைவர்க்கும் நன்றி கூறிவிட்டு, சர்ஜரி நேரம் மற்றும் அதனை முடிந்தும் தன்னுடனே பயணித்த செவிலியர்களுக்கும் நன்றியை தெரிவித்தார் அர்ச்சனா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.