Nila Serial Bavithra: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் `நிலா'. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் பவித்ரா. இவர், வீஜேவாக இருந்து சீரியல் நடிகையானவர். ஆனால் அதற்கு முன்பே மாடலிங் துறையில் தடம் பதித்தவர். 2017-ம் ஆண்டு ’மிஸ் சவுத் இந்தியா’ பட்டத்தை வென்றவர்.
Advertisment
நிலா சீரியல் நடிகை பவித்ரா
சன் டிவியில் `வணக்கம் தமிழா' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கும் போது,`நிலா' சீரியல் வாய்ப்பு வந்ததாம். சரி, டிரை பண்ணிப் பார்க்கலாம் என்று நினைத்து ஓகே சொன்னாராம் பவித்ரா. மார்ச் 23, 1995 அன்று சென்னையில் பிறந்த இவர், எம்.பி.ஏ படித்துள்ளார். பின்னர் ஒரு கார்ப்பரேட் துறையில் பணியாற்றிய அவர், தனது மாடலிங் வாழ்க்கையை தொடருவதற்காக, அந்த வேலையை விட்டார். சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சோப்பனா சுந்தரி ஷோவில் போட்டியாளராக கலந்துக் கொண்டதன் மூலம் நன்கு அறியப்பட்டார்.
Advertisment
Advertisements
தவிர சன் டிவி-யில் சூரிய வணக்கம், வணக்கம் தமிழா, தமிழச்சி ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடித்து கடந்தாண்டு வெளியான சர்கார் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். தற்போது நிலா சீரியலில் நடிப்பதால், தினமும் நாள் முழுக்க ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பவித்ரா, ஓய்வு நேரங்களில் படங்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...