Vijay TV Bhavana : தொகுப்பாளர்களை கவனிக்க வைப்பதில் எப்போதும் விஜய் டிவி முன்னணி தான். அந்நிறுவனத்தில் தொகுப்பாளர்களாக இருந்த சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகராகி இருப்பதும், மா.க.பா ஆனந்த், ரியோ ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருப்பதும் இதற்கு முக்கியக் காரணம். அங்கு பிரபலமான தொகுப்பாளினியாக திகழ்ந்தவர் பாவனா.
விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்திருக்கிறார். தனித்துவமான குரலுடைய இவர் நன்றாக பாடவும் செய்வார். நல்ல உயரம், ஒல்லியான தேகம், சரியான உச்சரிப்பு இதெல்லாம் சேர்ந்தது தான் பாவனா என்று சொல்லலாம்.
Advertisment
Advertisements
பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி பாவனாவை சில ஆண்டுகளாக விஜய் டிவியில் பார்க்க முடியவில்லை. ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். இசையில் ஆர்வம் மிகுந்த பாவனா, இசை ஆல்பங்களில் பாடுவது, அதில் நடிப்பது என தனது தனிப்பட்ட வாழ்க்கையை பிடித்தவாறு அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற விஜய்யின் ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழாவையும் ஆர்.ஜே.விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். தனது கரியரை ஆர்.ஜே-வாக தொடங்கிய பாவனா அதன் பிறகு தான், சின்னத்திரைக்குள் நுழைந்திருக்கிறார். சின்ன வயதிலேயே கிளாஸிக்கல் டான்ஸ் கற்றுக் கொண்ட பாவனா, நன்றாக பரதநாட்டியம் ஆடுவார். எம்.பி.ஏ முடித்த இவருக்கு நிகில் ரமேஷ் என்ற பிஸினெஸ் மேனுடன் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.
34 வயதாகும் பாவனா மும்பையில் வசித்து வருவதால், பாலிவுட் பிரபலங்களுக்கும் பரிச்சயமானவராகி விட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"