/tamil-ie/media/media_files/uploads/2019/12/VJ-Bhavana-Wedding-Anniversary.jpg)
VJ Bhavana Wedding Anniversary
VJ Bhavana Balakrishnan: விஜய் தொலைக்காட்டியில் சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் வி.ஜே பாவனா. தனித்துவமான குரலுடைய இவர் நன்றாக பாடவும் செய்வார். நல்ல உயரம், ஒல்லியான தேகம், சரியான உச்சரிப்பு இதெல்லாம் சேர்ந்தது தான் பாவனா என்று சொல்லலாம்.
கணவருடன் வி.ஜே.பாவனாபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி பாவனாவை சில ஆண்டுகளாகவே விஜய் டிவியில் பார்க்க முடியவில்லை. ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். இசையில் ஆர்வம் மிகுந்த பாவனா, இசை ஆல்பங்களில் பாடுவது, அதில் நடிப்பது என தனது தனிப்பட்ட வாழ்க்கையை பிடித்தவாறு அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
கணவருடன் வி.ஜே.பாவனாஇதற்கிடையே பலருக்கும் பாவனாவுக்கு திருமணம் ஆகியிருப்பது பற்றி தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும், இரண்டு, மூன்று ஆண்டுகள் இருக்கும் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே பாவனாவுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. சமீபத்தில் தனது திருமண நாளைக் கொண்டாடிய பாவனா, கணவருடன் இருக்கும் 8 படங்களைப் பகிர்ந்து இத்தகவலைப் பகிர்ந்துள்ளார்.
‘எங்களுடையது பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். எந்தத் திருமணமும் பெர்ஃபெக்ட் இல்லை, என்னுடையதும் அப்படித்தான். ஆனால் நான் என் கணவரைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டிருப்பேனா எனத் தெரியவில்லை. அவருக்குப் பின் நானும், எனக்குப் பின் அவரும் இருக்கிறோம். அது தான் எங்களை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்திருக்கிறது’ என்ற பாவனாவின் திருமணநாள் பதிவுக்கு லைக்ஸ் மழை பொழிந்துக் கொண்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us