பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம், தமிழகமெங்கும் பிரபலமானவர் விஜே தீபிகா. இதில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக, சீரியலில் குறுகிய காலமே நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு முகப்பரு சிகிச்சைக்காக தீபிகா, சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இப்போது தீபிகா, ஜீ தமிழ் டிவியின் சித்திரம் பேசுதடி சீரியலில் நடிக்கிறார்.
இந்நிலையில், தீபிகா சமீபத்தில் ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆங்கரிங் பயணம், சீரியல், வெற்றி தோல்வி, குடும்பம், முகப்பரு, அதிலிருந்து மீண்டு வந்தது என அனைத்தையும் அந்த பேட்டியின் போது தீபிகா பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய தீபிகா,”நான் வீட்டுல மூனாவது பொண்ணு. நான் மீடியாவுக்கு வரதுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப பயந்தாங்க. சொந்தகாரங்க திட்டும்போது ரொம்ப வருத்தப்படுவாங்க. எந்தவொரு ஃபங்ஷனுக்கு போனாலும், அம்மாவ அழ வச்சுடுவாங்க. அம்மா அழுதுட்டே வந்து புலம்பிட்டே இருப்பாங்க.
இப்போமே நிறைய பேரு, உனக்கு வீடு, குடும்பம் பாக்கணும்னா என்ன வேணாலும் பண்ணலாமே, படிச்சிருக்க. படிச்ச வேலைக்கு போலாமே. ஏன் இதை பண்றனு கேட்பாங்க.
ஆனா, இது என்னோட ஆசை. நான் சீரியல் எதிர்பார்த்து வந்து பொண்ணு கிடையாது. ஆங்கரிங் மட்டும்தான் என் மனசுல இருந்தது. நிறைய சேனல்ல ஆடிஷன்ஸ் கொடுத்துருந்தேன். எங்கயுமே கிடைக்கல.
அதேமாதிரி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், முகப்பரு பிரச்சனையால் விட்டு போனது குறித்து தீபிகா பேசுகையில், எனக்கு முகப்பரு விஷயம் புதுசாத்தான் இருந்தது. ஏன்னா, அதுவரைக்கும் என்னைய யாரும்’ நீ அப்படி இருக்க, இப்படி இருக்கனு எதுவுமே சொன்னதில்ல. ஆனா, சோஷியல் மீடியால வந்த கமென்ட்ஸ் தான் என்னைய ரொம்ப காயப்படுத்திச்சு.
அப்புறம் என் மனசுல என்ன இருக்குதுனு வெளிப்படையா சொன்னபிறகு, எல்லா கமென்ட்ஸ்மே பாசிட்டிவா மாறிடுச்சி. அதனால எனக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது என இப்படி பல விஷயங்களை அந்த பேட்டியின் போது, தீபிகா மனம்திறந்து பேசினார்.
இந்நிலையில் தீபிகா பகிர்ந்த சமீபத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று அனைவரையும் உருக வைத்துள்ளது. அதில் தன் அப்பா, அம்மாவுக்கு என தன் சொந்த செலவில் சின்னதாக ஒரு அறையுடன் கூடிய ஓட்டு வீடு ஒன்றை கட்டிய புகைப்படங்களை தீபிகா பகிர்ந்துள்ளார்.
அதில், “சின்ன வயசுல டீச்சர் பெரிய பசங்களா ஆனதும் அப்பா, அம்மாக்கு என்ன செய்வீங்கனு கேட்டா, நிறைய பேரு வீடு கட்டி கொடுப்போம்னு சொல்லுவோம்.
ஆமா எல்லா பசங்களுக்கும், அப்பா அம்மாக்கு சொந்தமா ஒரு வீடு கட்டி தரனும்னு கண்டிப்பா ஆசை இருக்கும்.
வீடு ஒரு சின்ன விஷயம் இல்ல அதுல ஆயிரகணக்கான எமோஷன் இருக்கு.
இன்னைக்கு எங்க அம்மா அப்பாக்கு என்னால முடிஞ்ச ஒரு கிஃப்ட் கொடுத்துருக்கேன். ஒருவேளை பாக்குற உங்களுக்கு இது சின்னதா தெரியலாம் ஆனா அதுல வாழ போற எங்களுக்கு இது கனவு. நிம்மதியா துங்க ஒரு இடம் வேணும் நினைச்சவங்களுக்கு இந்த குட்டி வீடு கண்டிப்பா சந்தோஷம் தரும்னு நம்புறேன்”.
விஜே தீபிகா பகிர்ந்த இந்த படங்கள் பார்ப்பவர்கள் மனதை உருக வைத்துள்ளது. நெட்டீசன்ஸ் பலரும் சூப்பர், வெரி குட், பெருமையான தருணம் என அவரை வாழ்த்தி கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.