பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம், தமிழகமெங்கும் பிரபலமானவர் விஜே தீபிகா.
தீபிகா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது ஆங்கரிங் பயணம், சீரியல், வெற்றி தோல்வி, குடும்பம் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.
அதில் தீபிகா பேசுகையில், 'நான் வீட்டுல மூனாவது பொண்ணு. நான் மீடியாவுக்கு வரதுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப பயந்தாங்க. சொந்தகாரங்க திட்டும்போது ரொம்ப வருத்தப்படுவாங்க. எந்தவொரு ஃபங்ஷனுக்கு போனாலும், அம்மாவ அழ வச்சுடுவாங்க. அம்மா அழுதுட்டே வந்து புலம்பிட்டே இருப்பாங்க.
இப்போமே நிறைய பேரு நீ படிச்சிருக்க. உனக்கு வீடு, குடும்பம் பாக்கணும்னா, படிச்ச வேலைக்கு போலாமே. ஏன் இதை பண்றனு கேட்பாங்க. ஆனா, இது என்னோட ஆசை'.. என பல விஷயங்களை தீபிகா மனம்திறந்து பேசினார்.
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் தீபிகா, சமீபத்தில் தன் கிராமத்தில் கோயில் விழா, ஆடு மாடு, வாழைத் தோப்பில் எடுத்த சில விடியோஸை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார்.
இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“