/tamil-ie/media/media_files/uploads/2019/11/Maha-Lakshmi-Serial-artist.jpg)
Maha Lakshmi Serial artist
Serial Artist Mahalakshmi : சன் மியூஸிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது கரியரை தொடங்கிய மகாலட்சுமி, இன்று சின்னத்திரையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
உண்மையில் தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் மஹாலட்சுமியிடம் இல்லை. பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்து, சிறந்த நிறுவனத்தில் பணிபுரிவது தான் அவரது இலக்காக இருந்தது. படித்துக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரியும் வாய்ப்பு மாகாவுக்கு எதேச்சையாகக் கிடைத்தது. அதை ஒரு பொழுதுபோக்காக நினைத்து ஒப்புக்கொண்ட அவர், படிப்பில் தான் அதிக கவனம் செலுத்தினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/maxresdefault-1-1024x576.jpg)
ஆனால் தொலைக்காட்சியில் தோன்றிய மகாலட்சுமிக்கு எதிர்பார்க்காத அளவுக்கு, ரசிகர்கள் தங்களது ஆதரவை அளித்தனர். இந்தத் திறமையான நடிகையிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கினர். அதனால் நிறைய நிகழ்ச்சிகளில் பணிபுரியத் தொடங்கிய மகாலட்சுமி, படிப்படியாக தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இது அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அவரின் கண்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/maxresdefault-3-1024x576.jpg)
மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் “வாணி ராணி” மிக முக்கியமான ஒன்றாகும். இதில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. ’ஆபிஸ்’, ’ஓரு கை ஓசை’, ‘அரசி’ போன்ற பிற பிரபலமான சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். சீரியல்கள் ஒவ்வொன்றும் தனக்கு வெவ்வேறு பாத்திரங்களைத் தருகின்றன என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார் மகா. முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், முன்னணி இயக்குநர்களின் சீரியல்களில் நடித்துள்ளார் மகாலட்சுமி.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/maxresdefault-4-1024x576.jpg)
இவரின் கணவர் அனில். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்த மகாலட்சுமிக்கு சிக்கன் பிரியாணி என்றால் கொள்ளை பிரியமாம். தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விகரம் என்பவருக்கு, ‘சேது’ திரைப்படம் ஆல் டைம் ஃபேவரிட்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.