2 கார்.. 2 ஏக்கர் நிலம்.. மணிமேகலையின் அடுத்த பிளான் இதுதான்!

மணிமேகலை சில மாதங்களுக்கு முன், புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கினார். பிறகு சில நாட்களிலே மற்றொரு காரும் வாங்கி அதையும் இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

மணிமேகலை சில மாதங்களுக்கு முன், புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கினார். பிறகு சில நாட்களிலே மற்றொரு காரும் வாங்கி அதையும் இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hussain manimegalai

2 கார்.. 2 ஏக்கர் நிலம்.. மணிமேகலையின் அடுத்த பிளான் இதுதான்!

சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில், மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.

பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி ஆன மணிமேகலை’ கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவரது படபட பேச்சு ரசிகர்களுக்கு பிடித்தது.

Advertisment
Advertisements

பிறகு  ஃபேமசான மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் மணிமேகலை ஒரு போட்டியாளராக தன் கணவனுடன் கலந்து கொண்டார். அதில்  இவர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் அதன்பிறகு மணிமேகலை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவராக மாறிவிட்டார்.  

தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆனால் இவர் தமிழகம் முழுவதும் வைரலானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான்.

ஏற்கெனவே மணிமேகலை, ‘ஹூசைன் மணிமேகலை’ பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில்’ இவர் சமைக்கும் போது குக்கர் வெடித்த வீடியோ பயங்கர வைரலாகியது.

பிறகு, கொரோனா லாக் டவுனில் மணிமேகலை, தன் கணவர் ஹூசைனுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று, அங்கு தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்றது. அதில் மணிமேகலையுடன் சேர்ந்து அந்த ஊரில் இருக்கும் சில பசங்களும் கூட, மக்களுக்கு அறிமுகமாயினர். அப்போதிருந்து தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லா பண்டிகைக்கும் ஊருக்கு சென்று, தங்கள் நண்பர்களை சந்தித்து, வீடியோ போடுவதை மணிமேகலை வழக்கமாக்கி விட்டார். மணிமேகலையின் குடும்பத்தினரும் அவரை மீண்டும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

இப்போது மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் மணிமேகலை சில மாதங்களுக்கு முன், புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கினார். பிறகு சில நாட்களிலே மற்றொரு காரும் வாங்கி அதையும் இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

மேலும் தங்கள் சொந்த ஊரில்’ மணிமேகலையும், ஹூசைனும் 2 ஏக்கரில் சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கினர். அதை ஏற்கெனவே இருவரும் யூடியூப் வீடியோவில் கூறினர்.

இப்போது புதிய செய்தி என்னவென்றால், அந்த இடத்தில்’ கூடிய சீக்கிரத்தில் இருவரும் வீடு கட்டும் பணியை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் என்ன வர வர ரொம்ப வசதியா ஆகிட்டிங்க.. உங்களுக்கு எவ்வளவு தான் சம்பளம் கொடுப்பாங்க என கேட்டு வருகின்றனர்.

மணிமேகலை விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அடிக்கடி வருகிறார்.  ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார். விஜய் டிவியின் பட்டிமன்ற பேச்சுகளிலும் கலந்து கொண்டு அசத்துகிறார். மேலும் இன்ஃப்ளூயன்சராகவும் இருக்கிறார். யூடியூப் வீடியோக்களிலும் அவர்களுக்கு தனி வருமானம் வருகிறது. ஹூசைனும்’ சினிமாவில் நடன இயக்குனராக இருக்கிறார். இருவருக்கும் இப்படி நிறைய வழியில் இருந்து வருமானம் வருவதால் தான் இவ்வளவு சீக்கிரம் இப்படியெல்லாம் வாங்க முடிந்ததாக  ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: