சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.
பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி கொடுத்த மணிமேகலை’ கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவரது படபட பேச்சு ரசிகர்களுக்கு பிடித்தது.
பிறகு மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் மணிமேகலை ஒரு போட்டியாளராக தன் கணவனுடன் கலந்து கொண்டார். அதில் இவர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் அதன்பிறகு மணிமேகலை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவராக மாறிவிட்டார்.
ஆனால் இவர் தமிழகம் முழுவதும் வைரலானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான்.
ஏற்கெனவே மணிமேகலை, ‘ஹூசைன் மணிமேகலை’ பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில்’ இவர் சமைக்கும் போது குக்கர் வெடித்த வீடியோ பயங்கர வைரலாகியது.
பிறகு, கொரோனா லாக் டவுனில் மணிமேகலை, தன் கணவர் ஹூசைனுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று, அங்கு தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதிருந்து தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லா பண்டிகைக்கும் ஊருக்கு சென்று, தங்கள் நண்பர்களை சந்தித்து, வீடியோ போடுவதை மணிமேகலை வழக்கமாக்கி விட்டார். மணிமேகலையின் குடும்பத்தினரும் அவரை மீண்டும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
இப்போது மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் மணிமேகலை இப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அதில் மணிமேகலை, தன் சிறுவயது புகைப்படங்களை இணைத்து வீடியோவாக பகிர்ந்துள்ளார். போட்டோவில் கூட இப்போது இருக்கும் அதே சிரிப்புடன் மணி, பார்க்க செம கியூட்டாக இருக்கிறார். இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“